ஆர்டர் உறுதி செய்யப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு விலைப்பட்டியல் அனுப்பப்படும். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட அதன் 100 சதவிகித சமூக இடைவெளியை பின்பற்றி ஆர்டர் செய்யும் முயற்சியின் விரிவாக்கம் தான் புதிய வாட்ஸ்அப் அடிப்படையிலான ஆர்டர் அம்சம் என்று பாஸ்ட் புட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரபலமான பாஸ்ட் புட் வகைகளை வழங்கி வரும் McDonald's தனது பிரத்யேக வாட்ஸ்அப் அடிப்படையிலான ஆடரிங் (WhatsApp-based ordering) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் பயனர்களை மெசேஜிங் தளம் வழியாக உணவை ஆர்டர் செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும், ஆர்டர்களை பிளேஸ் செய்ய வாட்ஸ்அப் போட் பயனர்களை முழு மெனு பட்டியலிடப்பட்ட ஒரு தனி வலைதள பக்கத்திற்கு அழைத்து செல்கிறது.
மற்ற உணவு விநியோக ஆப்-கள் மற்றும் வலைத்தளங்களிலிருந்து ஒரு ஆர்டரை நீங்கள் பிளேஸ் செய்வதை ஒப்பிடுகையில் McDonald நிறுவனத்தில் ஒரு ஆர்டரை செய்ய குறைவான வழிமுறைகளே தேவைப்படுகின்றன. வாட்ஸ்அப் அடிப்படையிலான ஆர்டர் முறை தற்போது டெல்லியில் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. மேலும் இது இந்தியாவின் பிற நகரங்களுக்கும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயல்முறையைத் தொடங்க, வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில்'9953916666' என்ற எண்ணைச் சேமிக்க வேண்டும்.
அதைத் தொடர்ந்து, பயனர்கள் மெக்டொனால்டின் வாட்ஸ்அப் போட்டிற்கு 'Hi' என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். அதன் பிறகு நிறுவனத்திடம் இருந்து ஒரு லிங்க் மெசேஜ் அனுப்பப்படும். அந்த லிங்கை பயனர்கள் தங்கள் தொலைபேசி பிரவுசரில் திறக்க வேண்டும். அதில் முழு மெனுவும் அதன் விலை பட்டியலும் இடம் பெற்றிருக்கும். பயனர்கள் தங்களுக்கு விருப்பமான உணவுகளை கார்ட்டில் சேர்த்ததும், பயனர்கள் தங்கள் முகவரி மற்றும் தொடர்பு விவரங்களை வழங்க வேண்டும்.
ஆர்டர் உறுதி செய்யப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு விலைப்பட்டியல் அனுப்பப்படும். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட அதன் 100 சதவிகித சமூக இடைவெளியை பின்பற்றி ஆர்டர் செய்யும் முயற்சியின் விரிவாக்கம் தான் புதிய வாட்ஸ்அப் அடிப்படையிலான ஆர்டர் அம்சம் என்று பாஸ்ட் புட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தொலைபேசியின் கேமரா வழியாக QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அணுகக்கூடிய டிஜிட்டல் மெனுவை இந்த நிறுவனம்தனது விற்பனை நிலையங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.
எனவே வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மனித தொடர்புகளை இந்த செயல்முறைகள் குறைக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரபலமான உணவு விநியோக நிறுவனங்களான சோமாடோ (Zomato) மற்றும் ஸ்விக்கி (Swiggy) ஆகியவை சமூக தொலைதூரத்தை உறுதி செய்வதற்கும் உணவகங்களிலிருந்து உணவை ஆர்டர் செய்வதற்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கும் குறிப்பிடத்தக்க அம்சங்களைச் சேர்த்தன. மேலும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை வாடிக்கையாளர்களுக்கு உறுதிப்படுத்த, இந்த இரண்டு தளங்களும் டெலிவரி எக்ஸிகியூட்டிவ் மற்றும் உணவகம் குறித்த விவரங்களை கொரோனா லேபிள்கள் மூலம் வழங்குகின்றன. கூடுதலாக, இந்த இரு நிறுவனங்களும் வாடிக்கையாளருக்கும் விநியோக நிர்வாகிக்கும் இடையில் தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ஏராளமான டிஜிட்டல் கட்டண முறைகளைச் சேர்த்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், பாதுகாப்பான விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்த நெறிமுறைகளுக்கு கட்டுப்படுவதாக தற்போது டெலிவரி இயங்குதளத்தின் மூலம் McDonald's நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Comments
Post a Comment