நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அதிரடியாக களத்தில் இறங்கிய பைடன்.. அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற உத்தரவு.

அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடையை நீக்கி , அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

புதிய அமெரிக்க அதிபராக ஜனநாயக கட்சி வேட்பாளரான 
ஜோ பைடன் ஜனவரி 20 ஆம் தேதியன்று பதவி ஏற்றார். அதன் பின்,அமெரிக்க அரசியல் சூடு பிடிக்க தொடங்கியது. பதவி ஏற்ற முதல் மூன்று நாட்களிலேயே 30 முக்கிய உத்தரவுகளில் அதிரடியாக கையெழுத்திட்டார் அதிபர் பைடன் . அவற்றுள் பெரும்பாலானவை , முன்னாள் அதிபர் டிரம்ப் கொண்டு வந்த தடைகளை நீக்கும் உத்தரவுகள் ஆகும் . அவற்றுள், அமெரிக்கா பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இணைவது, இஸ்லாமியர்கள் அமெரிக்கா வர விதிக்கப்பட்ட தடையை நீக்குவது போன்றவை மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்டது.

இந்த வரிசையில், தற்போது மூன்றாம் பாலினத்தவர்கள் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்ற டிரம்ப் நிர்வாகம் விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார் அதிபர் ஜோ பைடன்.

2016 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா , மூன்றாம் பாலினத்தவர்கள் ராணுவத்தில் சேர வழிவகை செய்தார் . ஒபாமாவின் இந்த உத்தரவை பின்னர் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் நீக்கினார். அதன்படி, அமெரிக்க ராணுவத்தில் ஏற்கனவே பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவர்கள் தொடர்ந்து பணி புரியலாம் ஆனால் இராணுவத்தில் புதிதாக மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்வதற்கு தடைவிதிக்கப்பட்டது.

தற்போது இந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பற்றி கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க இராணுவத்தில் சேவை செய்யத் தகுதியுள்ள அனைவரும் ராணுவத்தில் சேரலாம். தகுதியுள்ள அனைவரும் ,வெளிப்படையாகவும் பெருமையுடனும் சேவை செய்யும்போது அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கும், அதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பைடன் கூறினார் .

ஜோ பைடனின் இந்த நடவடிக்கையை , அமெரிக்காவில் உள்ள மூன்றாம் பாலின மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். இது தங்களுக்கு மிகவும் ஆறுதல் அளிப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!