நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பெருந்தொற்று தடுப்பூசி.. பேரழிவுமிக்க தோல்வியை சந்திக்க உள்ளோம்.. ஐநா எச்சரிக்கை..

உலகம் முழுவதும், பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

பல்வேறு முக்கிய நாடுகள், தங்களது நாட்டு மக்களுக்கே தடுப்பூசி வழங்குவதில் மும்மரம் காட்டி வருகின்றன. இதனால், ஏழை நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஒரு கருத்து நிலவி வருகிறது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் செயற்குழுக் கூட்டம், கடந்த 18-ஆம் தேதி அன்று நடைபெற்றது. அதில் பேசிய அந்த அமைப்பின் தலைவர், உலகம் தார்மீக ரீதியில் பெரிய தோல்வியைச் சந்திக்க உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், முதலில் எனக்கு தான் தடுப்பூசி என்கிற அணுகுமுறை, நம்மை நாமே தோற்கடித்துக் கொள்ளும் என்றும், இது தடுப்பூசியின் விலையை அதிகரிக்கும், பதுக்கலை ஊக்குவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இது போன்ற செயல்களால் பெருந்தொற்று நீண்ட நாட்களுக்கு நம்மிடையே நீடிக்கும் என்றும் டெட்ரோஸ் எச்சரித்தார்.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!