நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பல்வேறு மாநிலங்களில் இருந்து டிராக்டர்களுடன் தலைநகரை நோக்கித் திரண்டுள்ள லட்சக்கணக்கான விவசாயிகள்.

 
டெல்லியில் இன்று நடைபெற உள்ள டிராக்டர் பேரணியில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் டிராக்டர்களுடன் பங்கேற்க உள்ளனர். அதில் பெண்களும் பங்கேற்று டிராக்டர்களை ஓட்டுவர் எனறு விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

குடியரசு தின விழா முடிந்த பிறகே, பேரணி துவங்கவும் திக்ரி, சிங்கூர், மற்றும் காசிபாத் ஆகிய மூன்று பாதைகள் வழியாக சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு பத்து கிலோ மீட்டர் வேகத்தில் டிராக்டர்கள் அணிவகுக்க டெல்லி போலீசார் அனுமதித்துள்ளனர்.

அமைதியான முறையில் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் உறுதியளித்துள்ளனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஏராளமான விவசாயிகள் டெல்லி எல்லையில் டிராக்டர்களுடன் குவிந்துள்ளனர்.

தங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், வரும், பிப்.முதல் நாளில் பட்ஜெட் தாக்கலின்போது, பார்லிமென்ட் நோக்கி பேரணி நடத்துவோம் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே 5 ஆயிரம் டிராக்டர்களை மட்டும் அனுமதிக்கப் போவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விவசாயிகளை தடுப்பதற்காக போலீசார் ஆங்காங்கே சாலைகளின் குறுக்கே டிரக் லாரிகளை நிறுத்தியும் பாரிகேட் தடுப்புகளை அமைத்தும் வருகின்றனர். டெல்லி எல்லையில் பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!