நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காக, 15 கோடி அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கும் கூகுள் நிறுவனம்.

கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை குடிமக்களுக்கு ஏற்படுத்த 15 கோடி அமெரிக்க டாலர் நிதியினை கூகுள் நிறுவனம் ஒதுக்க உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பேசிய அவர், தடுப்பு மருந்துகள் எங்கு, எப்போது கிடைக்கின்றன என்று உலக மக்களுக்கு அறிவுறுத்த கூகுள் நிறுவனம் உதவத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

கிராமப் பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு தடுப்பு மருந்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக சுந்தர்பிச்சை தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!