நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி!

பொரித்த அப்பளத்துடன் ரசித்து சுவைத்து உண்ணத் தக்க வகையிலான பொடி வகை.
பருப்பு பொடி சூடான சாதத்துடன், பொரித்த அப்பளத்துடன் ரசித்து சுவைத்து உண்ணத் தக்க வகையிலான பொடி வகை ஆகும்.

காரசாரமான பருப்பு பொடியை ஒருவாட்டி, உங்கள் வீட்டில் இப்படி அரைத்துப் பாருங்கள்!

அன்றாட உண்ணும் உணவு வகைகளில் நிச்சயம் பூண்டின் பங்களிப்பு இருப்பது சிறந்தது. தோசை அல்லது இட்லிக்கு வித்தியாசமான அதே நேரத்தில் ஆரோக்கியமான பொடி வேண்டும் என நினைத்தால், இந்த பொடியைச் செய்து பாருங்கள்.மிகவும் எளிதான இந்த ரெசிபியைத் தயாரிக்க சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

தேவையான பொருட்கள்: 

துவரம் பருப்பு – 50 கிராம் 
கடலை பருப்பு – 50 கிராம் 
கொள்ளு – 50 கிராம் 
வர மிளகாய் – 20 
மிளகு – 1 ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு வாணலியில், கொள்ளு போட்டு வறுத்து, அது ஆறியதும், தோல் நீக்கி மிக்ஸில் அரைத்து வைக்கவும். இதேபோல், மிளகாய் தொடர்ந்து, மிளகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, ஆகியவற்றை ஒவ்வொன்றாக வறுத்து எடுத்து வைக்கவும். உப்புடன், வறுத்து வைத்த பொருட்களை, ஒவ்வொன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து, அனைத்தையும் சல்லடையில் சலித்து எடுத்தால் பருப்பு பொடி ரெடி..!.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்