நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி பெறும் ஒரே நாடு இந்தியா"வரும் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.5 சதவீதமாக உயரும்-IMF.

2021 - 2022ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 11 புள்ளி 5 விழுக்காடாக உயரும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி விகிதத்தை எட்டக் கூடிய ஒரே நாடு இந்தியாவாக இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சியை எட்டும் நாடுகளில் இந்தியா முக்கியப் பங்காற்றும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சீனாவை விட அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!