நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ணத்தில் மின்விளக்குகளால் ஜொலித்த கட்டடங்கள்.

குடியரசு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு முக்கியக் கட்டடங்கள் மூவர்ண மின் விளக்குகளால் ஜொலித்தன. டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட் உள்ளிட்ட இடங்களும், மின்விளக்குகளால் மூவர்ணக் கொடியை காட்சிப்படுத்தின.

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், மாநகராட்சி கட்டடம் ,கேட்வே ஆப் இந்தியா போன்ற பிரசித்தி பெற்ற கட்டடங்கள் மின்விளக்குகளின் அழகுடன் காட்சியளித்தன

உத்தரப்பிரதேசத்தின் மொர்தாபாத் ரயில் நிலையம் சுற்றுச்சூழலுக்கு இசைவான சோலார் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

சென்னையிலும் பல்வேறு இடங்களில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!