நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பசுமை தொழிற்சாலைகளாக மாறும் தேயிலை தொழிற்சாலைகள்... நீலகிரியில் புதுமை!

நாட்டின் மிகப்பெரிய தேயிலைத் தொழில் கூட்டுறவு அமைப்பாக இண்ட்கோசர்வ் (INDCOSERVE) செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. நீலகிரியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஆங்கிலேயர்கள் நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்ட பணப்பயிர்களில் ஒன்றான தேயிலையின் மீது சூழலில் ஆர்வலர்கள் எப்போதும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அது என்னவெனில், "காடுகளையும் மரங்களையும் அழித்தே தேயிலை பயிர் செய்யப்பட்டது. மேலும்,‌ தேயிலை தூள் உற்பத்தி செய்யவும் அதிகளவு மரங்கள் விறகாக எரிக்கப்படுகின்றன" என்பதுதான்.

இதைத் தனியார் பெருந்தேயிலைத் தோட்டங்கள் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், அரசு தேயிலைத் தோட்டங்கள் வனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக இண்ட்கோசர்வ் கட்டுப்பாட்டில் இயங்கும் இரண்டு தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் அதன் வளாகத்தைச் சூழலியலோடு ஒத்த தன்மையுடன் மாற்றும் முன்மாதிரி பணியில் களமிறங்கியுள்ளனர்.
இந்தப் புது முயற்சி குறித்து இண்ட்கோசர்வ் தலைமை நிர்வாக அதிகாரியும் நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான சுப்ரியா சாஹு, "தேயிலைத் தூள்‌ தயாரிக்க அதிகளவு மரங்களை எரிக்க வேண்டியது உண்மைதான். இதிலிருந்து வெளியேறும் புகையும் சாம்பலும் அருகில் உள்ள நீரோடைகளையும்‌ பாதிக்கிறது.

எனவே, முதல் முயற்சியாகத் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியோடு கட்டபெட்டு மற்றும் மாகாலிங்கா ஆகிய இரண்டு தொழிற்சாலை வளாகத்தில் ஆக்கிரமித்துள்ள களைத்தாவரங்களை அகற்றிவிட்டு பூர்வீக சோலை மரங்களை நடவு செய்கிறோம்.
இதோடு நீலகிரியின்‌ பூர்வீக புல் வகைகளையும் நட்டுள்ளோம். இந்தப் பகுதியில் காணப்படும் பறவைகளை ஓவியமாக வரைந்துள்ளோம். இதைக்கான தொழிற்சாலைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைக்கிறோம்" என்றார்.

கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையின் இந்தச் செயல் சூழலில் ஆர்வலர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!