நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நோய்களை தீர்க்கும் கிராமத்து ஸ்டைல் வெந்தய குழம்பு!

 எளிமையான முறையில் வீட்டில் செய்து உண்டு மகிழுங்கள்


கிராமத்து ஸ்பெஷல் வெந்தய குழம்பு ரெசிபி எப்படி எளிதாக நம் வீட்டிலே சமைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.


நாம் தினமும் விதவிதமான குழம்புகளை செய்து சாப்பிடுவதுண்டு. எளிமையான முறையில் வீட்டில் செய்து உண்டு மகிழுங்கள் .உடலுக்கு மிகவும் நல்லது.


தேவையான பொருட்கள்:


வெந்தயம் – 1,1/2 டீஸ்பூன்

நல்ல எண்ணெய் – 3 டீஸ்பூன்

கடுகு, உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 150 கிராம்

பூண்டு – 10 பற்கள்

தக்காளி (சின்னது) – 1

கறிவேப்பிலை – சிறிதளவு

வத்தல் பொடி – 1 டீஸ்பூன்

மல்லிப்பொடி – 1டீஸ்பூன்

குழம்பு மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்

மஞ்சள் போடி – 1/2 டீஸ்பூன்

சீரக பொடி – கால் டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

புளி – 1 எலுமிச்சை அளவு


செய்முறை:


வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம் சேர்த்து பொறிந்ததும் கடுகு சேர்த்து தாளித்து, உரித்த வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.வதங்கும்பொழுது சிறிதளவு கறிவேப்பிலை போட வேண்டும்.பின்னர் பூண்டு போட்டு பொன்னிறமாக வதக்குங்கள்.

அதனுடன் வத்தல் பொடி, குழம்பு மிளகாய் தூள், சீரக தூள்,மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறி, புளி கரைசல் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடுங்கள், 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள்.. மனமான வெந்தய குழம்பு ரெடி..!


Also read :  பசுமை தொழிற்சாலைகளாக மாறும் தேயிலை தொழிற்சாலைகள்... நீலகிரியில் புதுமை!

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!