நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஸ்பெயின் அரசுக்கு எதிராக, முன்னாள் தலைவர்களை சுவர் ஓவியமாக வரைந்து நூதன போராட்டம்.

ஸ்பெயின் அரசுக்கு எதிராக, முன்னாள் தலைவர்களை சுவர் ஓவியமாக வரைந்து நூதன போராட்டம்.


ஸ்பெயின் அரசுக்கு எதிராக ஓவியர் ஒருவர் சுவர் ஓவியம் மூலம் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

ஸ்பெயின் அரசுக்கு எதிராக கருத்து வெளியிட்டதை அடுத்து பாப் பாடகர் பாப்லோ ஹசலை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்திலும், கலவரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அமைதியான வழியில் போராட்டத்தை நடத்தும் விதமாக ஒவியர் ஒருவர் முன்னாள் ஸ்பெயின் அரசர் ஜுவான் கார்லஸ் மற்றும் முன்னாள் ராணுவ தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோ ஆகியோரின் சுவர் ஓவியத்தை வரைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

ஓவியரின் புது முயற்சி அந்நாட்டு மக்களிடையே வரவேற்பை பெற்று உள்ளது.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!