நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபரீதம் ஓடும் ரயிலின் கீழ் படுத்து உயிர்தப்பிய பெண்..

 ரயில் புறப்பட்ட நேரத்தில் ரயில்வே தண்டவாளத்தில் சிக்கி கொண்ட பெண் தண்டவாளத்திலேயே படுத்து உயிர்தப்பிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


ரயில் புறப்பட்ட நேரத்தில் ரயில்வே தண்டவாளத்தில் சிக்கி கொண்ட பெண் தண்டவாளத்திலேயே படுத்து உயிர்தப்பிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ஒரு பயங்கரமான வீடியோவில், ஒரு பெண் நகரும் ரயிலின் கீழ் ரயில்வே தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு உயிரை காப்பாற்ற முயன்றபோது அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளதாக செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது. 


ரயில் சிக்கனல்காக காத்திருந்தபோது ஒரு பெண், ரயில்வே தண்டவாளத்தில் அடுத்த பிளாட்பார்மிற்கு செல்வதற்காக நடந்துள்ளார் . அப்போது எதிர்பாராதவிதமாக ரயிலை எடுத்துவிட்டதால் அந்த பெண் அதிர்ச்சியடைந்து நின்று விட்டார். அப்போது அங்கு நின்றவர்கள் பலர் அப்படியே அங்கு படுக்கும்படி கூறினர். இதனையடுத்து ரயில் மெதுவாக நகரும்போது அந்த பெண் ரயில்வே தண்டவாளத்தில் படுத்துக் கிடப்பதை வீடியோவில் காணலாம். பின்னர் ரயில் கடந்து சென்ற பின் அந்த பெண் அதிஷ்டவசமாக உயிருடன் எழுந்திருக்க முயன்றார். அப்போது அங்கு இருந்த பலர் ஓடி சென்று அவரை பாதுகாப்பாக தூக்கி எழுந்து நிற்க உதவுகின்றனர்.   இந்த வீடியோவை நெட்டிசன் ஒருவர் ஷேர் செய்த நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இதுவரை 2,000 க்கும் மேற்பட்ட பார்வைகளையும், பல நூறு லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலர், இந்த சம்பவம் குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் சிலர் அந்த பெண்ணின் கவனக்குறைவை விமர்சித்தனர்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்