நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தோனிக்கு ‘ஸ்பெஷல் சாங்’ டெடிகேட் செய்த ஆஸ்கர் நாயகன்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவுக்காக பாடல்களை டெடிகேட் செய்துள்ளார்.
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘லகான்’ என்ற இந்தி திரைப்படத்தில் வரும் ‘சேல் சலோ’ (Chale Chalo) பாடலை சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு டெடிகேட் செய்வதாக கூறியுள்ளார். இந்த பாடல் வீரர்களை ஒன்றாக விளையாட தூண்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவுக்கு ஒரு பாடலையும் டெடிகேட் செய்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் லைவ் நிகழ்ச்சியில் பேசிய ரஹ்மான், சி.எஸ்.கே நட்சத்திரங்கள் தோனி மற்றும் ரெய்னா ஆகியோருக்கு பாடல்களை டெடிகேட் செய்வதாக கூறினார். “லாகான் திரைப்படத்திலிருந்து எம்.எஸ். தோனிக்கு ‘சேல் சாலோ’ பாடலை டெடிகேட் செய்ய விரும்புகிறேன், ஏனெனில் இது வீரர்களை ஒன்றாக கிரிக்கெட் விளையாட தூண்டுகிறது. ரெய்னாவுக்கு ‘மங்தா ஹை க்யா’ பாடலை டெடிகேட் விரும்புகிறேன். ஏனென்றால் நான் பெங்களூருக்குச் செல்லும் போதெல்லாம் அவர் ரங்கீலா படத்தில் வரும் இந்த பாடலை நிறைய முறை கேட்டுக்கொண்டிருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 2வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்