நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்கய்யா.. செமயா இருக்காங்கப்பா இந்த யூனிஃபார்ம்ல!

டோக்கியோ: இந்த ஆண்டு இறுதியில் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் நிறைவு விழாக்களுக்கான தனது சீருடைகளை அமெரிக்க அணி வெளியிட்டுள்ளது.

இந்த சீருடைகள் அமெரிக்காவின் மிக சிறந்த வடிவமைப்பாளரான ரால்ப் லாரன் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.

மாடல் வீரர்கள் இந்த சீருடை அணிந்தபடி இருக்கும் புகைப்படங்கள் புதன்கிழமையன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .

உயர்நிலைப் பள்ளி திரைப்படம்

இந்த புதிய சீருடை 1980 ஆம் ஆண்டு வெளிவந்த 'உயர்நிலைப் பள்ளி' என்று திரைப்படத்தின் ஆடைகளுடன் ஒப்பிடப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது. மேலும் விண்வெளி வீரர் கியரின் ஆடைகளுடனும் ஒப்பிடப்பட்டு வருகிறது.

மேக்ஸ் டானி ட்வீட்

ரால்ப் லாரனின் புதிய வடிவமைப்புகள் சமூக ஊடகங்களில் கலவையான கருத்துக்களைப் பெற்றன. 'ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ரால்ப் லாரன் எங்கள் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களை மிகவும் துணிச்சலான ஆடைகளில் அலங்கரிப்பதற்கு தன்னால் முடிந்ததைச் செய்கிறார்' என்று டெய்லி பீஸ்ட் நிருபர் மேக்ஸ் டானி ட்வீட் செய்துள்ளார்.

வாட்டர் போலோ ஆஷ்லீ ஜான்சன்

மல்யுத்த வீரர் ஜோர்டான் பரோஸ் முதல் வாட்டர் போலோ நட்சத்திரம் ஆஷ்லீ ஜான்சன் வரை பலவிதமான விளையாட்டு வீரர்களும் இந்த புதிய டிசைன் டிரஸ்ஸைப் போட்டு போஸ் கொடுத்துள்ளனர். மக்களின் வரவேற்பை இவை பெற்றுள்ளன.

லண்டன் 2012 விளையாட்டு வீரர்கள்

அமெரிக்க ஒலிம்பிக் வீரர்கள், போட்டி விழாவில் டெனிம் அணிவது இது முதல் முறை அல்ல. 2008 ஆம் ஆண்டிலிருந்தே ரால்ப் லாரனின் வடிவமைப்புகளைத்தான் அமெரிக்க அணியினர் அணிகின்றனர். லண்டன் 2012 இல் அதன் விளையாட்டு வீரர்கள் தேசபக்தியை விளக்கும் வகையிலான ஜீன் ஜாக்கெட்டுடன் காக்கி பேன்ட்ஸை அணிந்தனர்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்