நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்த ஜன்னல் எந்தப் பக்கம் நோக்கி இருக்கிறது? ஒரு முடிவில்லா சுவாரசிய விளையாட்டு......

 Optical illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். இந்த படத்தில் ஜன்னல் எந்தப் பக்கம் நோக்கி இருக்கிறது, இடதா அல்லது வலதா என்று சரியாக சொன்னால் நீங்கதான் கில்லாடி.


Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். இந்த படத்தில் ஜன்னல் எந்தப் பக்கம் நோக்கி இருக்கிறது, இடதா அல்லது வலதா என்று சரியாக சொன்னால் நீங்கதான் கில்லாடி.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களால் வெறித்தனமாக பார்க்கப்பட்டு விடை காணப்பட்டு வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தால் இருட்டில் விளக்கை நோக்கி செல்லும் விட்டில் பூச்சிகளைப் போல நெட்டிசன்கள் படையெடுத்து வருகிறார்கள்.


ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களுக்கு முடிவில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி, முடிவில் விடை தெரியும்போது அவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள ஜன்னல் எந்தப் பக்கம் நோக்கி இருக்கிறது என்பதை சரியாக கூறவேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கான சவால். ஏனென்றால், இந்த ஜன்னல், முதல் பார்வையில், வலது பக்கம் நோக்கி இருப்பது போலவும் இரண்டாவது பார்வையில் இடது பக்கம் நோக்கி இருப்பது போலவும் தெரியும் உண்மையில் இந்த ஜன்னல் எந்தப் பக்கம் நோக்கி இருக்கிறது என்று உறுதியாகக் கூற முடியாமல் குழப்பத்தை ஏற்படுத்தும்.


இந்தப் படத்தில் உள்ள ஜன்னல் சிலர் வலதுபுறம் இருப்பதாகச் கூறுகிறார்கள். சிலர் இடது பக்கம் நோக்கி இருப்பதாகக் கூறுகிறார்கள்.

நீங்கள் சொல்லுங்கல் இந்த ஜன்னல் எந்தப் பக்கம் நோக்கி இருக்கிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் நம் மூளையுடன் விளையாடி, நாம் பார்ப்பது சரியானது என்று நம்ப வைக்கிறது.

இந்த நிலையில், ஒரு கோணத்தில் இருந்து கவனம் செலுத்தினால், ஜன்னல் வலதுபுறமாக இருப்பதை நம் மனம் நம்ப வைக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல, மற்றொரு கோணத்தில் இருந்து பார்த்தால் ஜன்னல் இடதுபுறமாக இருப்பதாக நம் மனதை நம்பை வைக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நமது கவனத்தை வலமிருந்து இடமாக மாற்றுவது நமது மூளையை இடது பக்கம் நோக்கியதாக நினைத்து ஏமாற்றிவிடும். எப்படி இது நடக்கிறது என்றால், நமது பார்வையில் ஏற்படும் மாற்றங்களால் இது நடக்கிறது. எனவே, இந்த ஆப்டிகல் இல்யுஷன் மனித பார்வையின் உணர்வை அடிப்படையாகக் கொண்டது. உணமையில் இந்த ஜன்னல் வலது பக்கம் நோக்கி இருக்கிறதா? இடது பக்கம் நோக்கி இருக்கிறதா? என்று கேட்டால் அது உங்கள் பார்வையில்தான் இருக்கிறது.


ஜன்னல் எந்தப் பக்கம் நோக்கி இருக்கிறது என்று தெரிந்துகொள்வது சுவாரஸ்யமாக இருந்தது, இல்லையா?

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் சுவாரசியமாக இருந்தது இல்லையா? இதுபோன்ற சுவாரசியமான படங்களைப் பார்த்து மகிழ்ச்சியாக இருங்கள்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!