தேசிய நெடுஞ்சாலைகளில் அரளி செடி ஏன் வளர்க்கிறார்கள் தெரியுமா? பலரும் அறியாத சுவாரசிய தகவல்......
- Get link
- X
- Other Apps
இயற்கை மாற்றம், மழையின்மை, வெயிலின் பாதிப்பு ஆகியவற்றை உணர்ந்து பலரும் வீட்டு முன் வேம்பு, புங்கை மரக்கன்றுகளை நடுகின்றனர். இதற்கு வழி இல்லாதவர்கள் மாடி தோட்டம் அமைக்கின்றனர்.
ஆனால் நெடுஞ்சாலைகளின் நடுவே அதிகமாக அரளி செடியினை நட்டு வைத்திருப்பார்கள்... இதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேசிய நெடுஞ்சாலையில் அரளி செடி வளர்ப்பது ஏன்?
அரளி தாவரத்தில் இரண்டு வகைகள் உள்ளன. இவற்றின் மலர்களை கோயில்களில் தெய்வங்களுக்கு மாலையாகப் உபயோகிப்பதை நாம் பார்த்திருப்போம்.
நெடுஞ்சாலைகளில் சாலைகளுக்கு நடுவே அதிகமாக அரளி செடிகளை வைக்கின்றனர். இதன் பூக்களை வாகனத்தில் செல்லும் போது நாம் பார்க்கும் போது இவை கண்ணுக்கு மிகவும் வண்ணமயத்தை தரும் காட்சியாக இருக்கும்.
நெடுஞ்சாலைகளில் பல்லாயிரக்கணக்கில் வாகனங்கள் வந்து போகின்றன. இந்த வாகனங்களிலிருந்து வெளிவரும் புகைகளில் கார்பன் நச்சுகள் அதிகமாக இருக்கும்.
இந்த நச்சுவாயு, காற்றை பாதிப்பதுடன் சாலையில் பயணம் செய்வோருக்கு சுவாசக் கோளாறுகளையும் உருவாக்கும். அதனால் தான் இதன் இலைகள் பச்சை நிறத்திலிருந்து கொஞ்சம் கறுப்பு நிறமாகவும் மாறி இருக்கும்.
அரளி செடியில் உள்ள இலைகள் மற்றும் மலர்கள் கார்பன் துகள்களை காற்றிலிருந்து நீக்கி காற்றிலுள்ள மாசுகளை அகற்றி, தூய காற்றாக மாற்றும் தன்மை கொண்டவை.
இதனால் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது தூய்மையான காற்றை சுவாசிக்க முடியும். அதனால்தான் நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் அதிகமான அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
சத்தத்தை குறைத்து விபத்திலிருந்து பாதுகாப்பு
மேலும் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் உறிஞ்சுகிறது.
வாகனங்கள் தரும் இரைச்சலையும் குறைத்து ஆற்றல் படைத்தவை இந்த செடியினை விலங்குகள் உண்ணாது.
மண் அரிப்பையும் தாங்கும் சக்தி கொண்ட இவற்றினை பராமரிப்புக்கான செலவுகளும் மிகக் குறைவு. அழகோடு சேர்த்து இத்தனை வசதிகளும் இருப்பதால் தான் நிறைய நெடுஞ்சாலைகளில் இதைக் காணமுடிகிறது.
ALSO READ : இந்த ஜன்னல் எந்தப் பக்கம் நோக்கி இருக்கிறது? ஒரு முடிவில்லா சுவாரசிய விளையாட்டு......
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment