நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடல் எடையை வேகமாக குறைக்க ஆசையா? அப்போ உடற்பயிற்சிக்கு முன்னர் இந்த 3 உணவுகளை எடுத்துகோங்க....

 பொதுவாக உடல் எடையைக் குறைப்பதற்காக உடற்பயிற்சி செய்யும்போது வொர்க்அவுட்டுக்கு முன் ஏதாவது சாப்பிடவும் குடிக்கவும் செய்ய வேண்டும்.

எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் உடற்பயிற்ச செய்யக் கூடாது என்பதால் எதையாவது சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்வது என்பது மிகவும் தவறு.

உடற்பயிற்சியின் போது நம்முடைய உடலுக்கு எனர்ஜி தேவை. அதிலும் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதும் மிக முக்கியம்.

அப்படி உடற்பயிற்சிக்கு முன் என்ன மாதிரி உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.


  • பீநட் பட்டருடன் உலர் திராட்சை சேர்த்து உடற்பயிற்சிக்கு முன்பாக எடுத்துக் கொள்வது நல்லது. பீநட் பட்டருடன் உலர் திராட்சை சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது உடற்பயிற்சியின் போது உடலுக்கு நல்ல ஸ்டாமினைவை கொடுக்கும். இவை இரண்டிலுமே ஆரோக்கியமான கொழுப்பு இருப்பதால் இது பசியைக் கட்டுப்படுத்தும். அதோடு எடையும் வேகமாகக் குறையும்.

  • வொர்க்அவுட் செய்யும்போது அதற்கு முன்பாக வாழைப்பழத்தை சாப்பிடும்போது நீண்ட நேரம் உடலை முழு எனர்ஜியுடன் வைத்திருக்க வேண்டும். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிரம்பியது போல இருக்கும். இதனால் அதிக கலோரிகள் கொண்ட உணவுகள் எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படுவதோடு எடையும் வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.


  • வொர்க்அவுட் செய்வதற்கு முன்பு இந்த நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்வது நல்லது. இது உடற்பயிற்சிக்குத் தேவையாான ஆற்றலைக் கொடுத்து அதிகப்படியான கொழுப்பையும் கலோரிகளையும் எரிக்க உதவும்.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!