நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரு கப் தேங்காய் பாலில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

 தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன.

தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.  

அந்தவகையில் தேங்காய்ப்பாலில் அடங்கியுள்ள நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.


  • தேங்காய் பால் அவ்வப்போது அருந்துபவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.

  • வளரும் இளமைப்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் பாலை அருந்துவதால் இரும்பு சத்து கிடைக்கிறது.

  • தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.

  •  தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

  • மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நாள் முழுவதும் திட உணவுகள் ஏதும் உண்ணாமல் தேங்காய் பால் மட்டும் அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் நீக்கி, உடல் உறுப்புகள் சுத்தமாகும்.   

  • அடிக்கடி தேங்காய் பால் குடித்து வருபவர்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் தோலில் சுருக்கங்கள் ஏற்படாது. தோலில் உள்ள பளபளப்பு கூடி வயதான போதும் இளமையான தோற்றம் நீடிக்கும். 

  • தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

  • தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.  



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!