காலை உணவாக இதை மட்டும் மறக்காமல் சாப்பிடுங்க! ஆரோக்கியம் நிச்சயம்....
- Get link
- X
- Other Apps
அவசர கால உலகில் காலை உணவை தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
உடல் எடையை குறைக்கிறோம் என்று பலரும், நேரமில்லை என பலரும் காலை உணவை தவிர்ப்பதற்கு பல காரணங்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் உங்களுக்கு தெரியுமா? காலை உணவை தவிர்த்தால் பல நோய்களை நாமே விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
காலை உணவு தான் அன்றைய நாளுக்கான சக்தி, காலை உணவு ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே அன்றைய நாள் முழுதும் சுறுசுறுப்புடன் நாம் இயங்க முடியும்.
அந்த வகையில் மிகவும் எளிதான ஆரோக்கியமான காய்கறிகள் நிறைந்த தோசை செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 2 கப்
வெங்காயம் - 1
பீன்ஸ் - 10
முட்டைக்கோஸ் - 50 கிராம்
கேரட் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் வெங்காயம், பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட், கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்ததும், எண்ணெயை சூடேற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும், இதனுடன் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.
வெங்காயம் வதங்கிய பின்னர், நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும்இ
இந்த கலவையை தோசை மாவில் ஊற்றி கொத்தமல்லி சேர்த்து கிளறிவிடவும், இறுதியாக தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசைகளை ஊற்றி எடுத்தால் வெஜிடபிள் தோசை தயார்!!!
ALSO READ : வேப்ப இலை சாற்றில் இவ்வளவு மருத்துவகுணங்களா?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment