நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

செகன்டரி நம்பர் தேவையில்லை.. உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பலாம் - வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்.!

 WhatsApp Update | Wabetainfo சமீபத்தில் வரவுள்ள இந்த புதிய அப்டேட் பற்றி தகவல்களை வெளியிட்டு உள்ளது. வரவிருக்கும் புதிய அம்சம் வேறு டிவைஸின் தேவையில்லாமல் யூஸர்கள் தங்களுக்கு தாங்களே மெசேஜ்களை அனுப்ப அனுமதிக்கும் என்று Wabetainfo கூறி உள்ளது.


Meta-வுக்கு சொந்தமான பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் App-ஆன வாட்ஸ்அப், தனது யூஸர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்த பல புதிய மாற்று சுவாரஸ்ய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது இருக்கும் வாட்ஸ்அப் செட்டிங் யூஸர்கள் தங்கள் சொந்த நம்பருகே மெசேஜ்களை அனுப்ப அனுமதிக்காது. தற்போது யூஸர்கள் தங்கள் மொபைல் நம்பரை தொடர்ந்து wa.me/91 என்ற URL-ஐ பயன்படுத்தி தங்களுக்கு மெசேஜ்களை அனுப்பி கொள்ளலாம். ஆனால் உங்கள் சொந்த ஃபோன் நம்பருடன் கூடிய பிரைமரி டிவைஸில் மட்டுமே இந்த Chat தோன்றும் என்பதால் இது பல டிவைஸ்களுக்கு செட் ஆகாது. இருப்பினும் இதற்கு ஒரு தீர்வை வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது. இந்த அம்சம் கான்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள பர்சனல் சேட்டை-ஐ தேடி மற்றும் Tap செய்வதன் மூலம் யூஸர்கள் தங்களுக்கு தாங்களே மெசேஜ்களை அனுப்ப வாட்ஸ்அப் அனுமதிக்கும் என்று WaBetaInfo தெரிவித்துள்ளது.

இந்த அம்சம் அப்டேட் செய்யப்பட்டால் பல யூஸர்களுக்கு உதவியாக இருக்கும். ஏனென்றால் சில சமயங்களில் குறிப்பிட்ட சில முக்கிய விஷயங்களை நினைவில் வைத்து கொள்ள வேண்டிய கட்டாயம் அடிக்கடி பலருக்கு நேருகிறது. மொபைலில் நோட்ஸ் ஆப் இருந்தாலும், அதை பெரும்பாலான யூஸர்கள் பயன்படுத்துவதே இல்லை, மாறாக நாள் முழுவது நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் அரட்டை அடிக்க பயன்படுத்தும் வாட்ஸ்அப்-பில் குறிப்பெடுத்து வைக்கவே விரும்புகிறார்கள்.


ஏனென்றால் அதிக நேரம் வாட்ஸ்அப் பயன்படுத்துவதால், அதை பயன்படுத்தும் போதெல்லாம் முக்கிய விஷயங்கள் அடங்கிய டெக்ஸ்ட் , அடிக்கடி கண்ணில் சிக்கி மிக எளிதாக நினைவில் வைத்து கொள்ள முடியும் என்று கருதுகிறார்கள் பல யூஸர்கள். இதனிடையே WhatsApp தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் கண்காணித்து தகவல்களை வெளியிடும், Wabetainfo சமீபத்தில் வரவுள்ள இந்த புதிய அப்டேட் பற்றி தகவல்களை வெளியிட்டு உள்ளது. வரவிருக்கும் புதிய அம்சம் வேறு டிவைஸின் தேவையில்லாமல் யூஸர்கள் தங்களுக்கு தாங்களே மெசேஜ்களை அனுப்ப அனுமதிக்கும் என்று Wabetainfo கூறி உள்ளது.

இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டாவின் அப்டேட்டில் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அம்சம் வெளியானால் மேலே ஏற்கனவே குறிப்பிட்டபடி எதிர்காலத்தில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டாவில் contacts list-ல் தேடும் போது, உங்கள் பர்சனல் சேட்-ஐ டேப் செய்வதன் மூலம் உங்களுக்கே மெசேஜ்களை அனுப்பி கொள்ள முடியும் என்று Wabetainfo-வின் அறிக்கை கூறுகிறது. மல்டி-டிவைஸ் செட்டப்பில் மற்றொரு மொபைலுக்கான சப்போர்ட்டை WhatsApp இன்னும் சேர்க்கவில்லை, ஆனால் இது செயலில் உள்ளது. தற்போது டெஸ்க்டாப் பீட்டா பதிப்பில் இந்த அம்சத்தை வாட்ஸ்அப் டெஸ்ட் செய்து வருகிறது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா வெர்ஷன்களிலும் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே நீங்கள் உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் இருந்து WhatsApp-ஐ பயன்படுத்தினால், இந்த எதிர்கால அப்டேட்டில் உங்கள் பெயரை chat list-ல் பார்க்கலாம்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்