நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காஷ்மீரில் ஒரு விசித்திர மலை.. வாகனங்களை பின்னால் இழுக்கும் ஆச்சரியம் - சுவாரஸ்ய அனுபவம்....

 Magnetic Hill | நாம் வாழும் இந்த உலகம் ஏராளமான விசித்திரங்கள் நிறைந்தது. நம் மூளைக்கும், அறிவியலுக்கும் அப்பாற்பட்ட இயற்கை அற்புதங்கள் பல இந்த பூமியில் நிறைந்துள்ளன.


சிறந்த இயற்கை அதிசயத்தை நீங்கள் அனுபவிக்க விரும்பினால் வெளிநாடுகளுக்கு எங்கும் செல்ல தேவை இல்லை. இந்தியாவிலேயே மிக அற்புதமான இயற்கை அதிசயம் ஒன்று இருக்கிறது. ஆம், லே லடாக்கிற்கு சுற்றுலா செல்லும் வழக்கம் சமீப காலமாக ட்ரெண்டாகி வரும் நிலையில், லடாக்கில் உள்ள லே (Leh) அருகே அமைந்துள்ள ஒரு மலை தான் மேக்னெட்டிக் ஹில் (Magnetic Hill) எனப்படும் காந்த மலை.

நீங்கள் சாகச பயணம் செய்வதில் ஆர்வமுள்ளவர் என்றால் இந்த மேக்னடிக் ஹில் உங்கள் அடுத்த சாகச பயணத்திற்கு சரியான தேர்வாக இருக்கும். இந்த வியத்தகு மலை ஸ்ரீநகர்-லடாக் சாலையில் நிம்மூவிற்கு தென்கிழக்கே 7.5 கிமீ தொலைவிலும், லே-விலிருந்து சுமார் 30 கிமீ தொலைவிலும் உள்ளது.

சிறப்பு:

சரி, இந்த மேக்னெட்டிக் ஹில் பகுதியின் சிறப்பு என்ன தெரியுமா? லே-வில் உள்ள இந்த மலை இயல்பான புவியீர்ப்பு விசையை மீறும் நிகழ்வுக்கு பிரபலமானது. புவியீர்ப்பு விசை பூமியை நோக்கி பொருட்களை ஈர்க்கிறது. பொருட்கள் உயரமான இடத்திலிருந்து விழும் போது கீழ் நோக்கி செல்வது தான் வழக்கம். அதே போல மேடு-களில் இருக்கும் பொருட்கள் பள்ளத்தை நோக்கி செல்வதும் இயற்கை நியதியாக நினைக்கிறோம்.

ஆனால் கடல் மட்டத்திலிருந்து சுமார் 11,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த காந்த மலையின் அருகே குறிப்பிட்ட இடத்தில் கார் அல்லது வேறு வாகனங்களின் இஞ்சினை ஆஃப் செய்து விட்டு நியூட்ரலில் நிறுத்தினால், அவ்வாகனங்களை அந்த காந்த மலை ஈர்க்கிறது. பொதுவாக மலைப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி இருந்தால் அது தாழ்வான பகுதியை நோக்கி உருண்டு செல்லவே வாய்ப்புகள் அதிகம் அல்லவா.! ஆனால் இந்த மலையில் இதற்கு அப்படியே எதிர் மேட்டை நோக்கி அதாவது காந்த மலை இருக்கும் திசையை நோக்கி வாகனங்கள் நகர்கின்றன.


வண்டியை ஆஃப் செய்த பின்னரும் காந்த மலை நோக்கி ஈர்க்கப்படும் வாகனங்கள் மணிக்கு அதிகப்பட்சம் சுமார் 20 கிமீ வேகத்தில் முன்னோக்கி செல்வது அனைவரையும் வியக்க வைக்கிறது. இந்த அசாதாரண நிகழ்வின் காரணமாக 'மர்ம மலை' மற்றும் 'ஈர்ப்பு மலை' போன்ற பல பெயர்களால் இந்த பகுதி குறிப்பிடப்படுகிறது. குறிப்பிட்ட பகுதியில் "புவியீர்ப்பு விசையை மீறும் நிகழ்வு" என்று எழுதப்பட்ட மஞ்சள் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் உங்கள் வாகனத்தை அருகில் மார்க் செய்யப்பட்டுள்ள பாக்சில் நிறுத்தி அதிசயத்தை அனுபவியுங்கள் என்றும் அந்த போர்டில் கூறப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் முன்னோக்கி ஈர்க்கப்படும் சாலை காந்த சாலை என்று அழைக்கப்படுகிறது. எனினும் இந்த வினோத நிகழ்வுக்கு சில அறிவியல் விளக்கங்கள் இருந்தாலும், உள்ளூர்வாசிகள் இந்த சாலை ஒரு காலத்தில் தகுதியான மக்களை சொர்க்கத்திற்கு கூட்டி சென்றது என நம்புகிறார்கள்.


அறிவியல் காரணம் :

காந்த மலையானது உள்ளிருந்து வெளிப்படும் வலுவான காந்த சக்தியைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மிகவும் வலுவான காந்த சக்த்தியின் விளைவாக அது அருகிலுள்ள வாகனங்களை தன்னை நோக்கி இழுப்பதாக குறிப்பிடப்படுகிறது. இந்திய விமானப்படை விமானங்கள் இந்த காந்த மலைக்கு அருகே பறப்பதில்லை.

இதற்கு மற்றொரு காரணமாக கூறப்படுவது ஆப்டிகல் இல்யூஷன் கோட்பாடு. ஒரு சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி லேயில் உள்ள காந்த மலை ஒரு "சைக்ளோப்ஸ் மலை". அதாவது இது ஒரு ஆப்டிகல் இல்யூஷன் மட்டுமே. இந்த கோட்பாட்டின் படி, காந்த மலையானது மேல் நோக்கி சாய்வாகத் தெரிந்தாலும் உண்மையில், கீழ் நோக்கி செல்கிறது. எனவே இது ஒரு மேல் நோக்கி சாய்வாக இருப்பது போல தோற்றமளிக்கும் ஆப்டிகல் இல்யூஷன். எனவே வாகனம் மேல் நோக்கி செல்வதாக கூறப்பட்டாலும் அது உண்மையில் கீழ்நோக்கி தான் செல்கிறது என்கிறார்கள்.

எப்போது போகலாம்?

இந்த சாலை ஆண்டு முழுவதும் திறந்திருந்தாலும் ஜூலை - அக்டோபர் மாதங்களுக்கு இடையில் மேக்னடிக் ஹில்லுக்குச் செல்ல சிறந்த நேரம். இந்த நேரத்தில் சாலைகள் தெளிவாக இருக்கும் என்பதால் வாகனம் ஓட்டுவதில் சிரமம் இருக்காது. இப்பகுதியில் பல உணவகங்கள் இல்லை என்பதால் இந்த அதிசய மலைக்கு லே-வில் இருந்து பயணம் செய்ய தொடங்கும் முன் போதுமான உணவை எடுத்து கொள்ளுங்கள்.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!