நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பீட்சா மீது இப்படியொரு காதலா.. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அமெரிக்க பெண்!

கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி, பீட்ஸா தொடர்புடைய 669 பொருட்களை சேகரித்து வைத்திருந்தார்.

இந்தியாவை பொருத்தமட்டிலும் புரோட்டா மற்றும் பிரியாணி இடம்பிடித்த அளவுக்கு பீட்ஸா, பர்கர் போன்றவை பெரும்பாலான வெகுஜன மக்களின் மனதில் இடம்பிடிக்கவில்லை.

இருப்பினும், நீங்கள் புரோட்டா வெறியராக இருந்தால் சராசரியாக எத்தனை புரோட்டவை சாப்பிட்டு விடுவீர்கள்? நிச்சயமாக புரோட்டா சூரி போல 100 எல்லாம் சாப்பிட முடியாது. ஆனால், சராசரியாக 10 முதல் 20 வைத்துக் கொள்ளலாமா? அப்படி சாப்பிட்ட முடித்த பின், அடுத்த சில நாட்களுக்கு உங்களுக்கு புரோட்டா மீதான காதல் குறைந்திருக்கும் தானே! ஆனால், அதை விடுத்து, புரோட்டா மீது கொண்ட காதலால், அது தொடர்புடைய பொருட்களை நீங்கள் சேகரித்துக் கொண்டிருப்பீர்களா என்ன?

அமெரிக்காவில் இதுபோன்ற விசித்திர நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. அதாவது, பீட்சாவை விரும்பிச் சாப்பிடும் டெலினா (Telina Cuppari) என்ற பெண் ஒருவர், ஏதோ ஆசைக்கு ஒன்றிரண்டு பீட்சாவை ஒரே வேளையில் தின்று தீர்த்தேன் என்பதோடு மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் அனேக சந்தர்பங்களில் அதை உண்பதையே ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளார்.


இத்துடன் நின்று விட்டால் பரவாயில்லை. பீட்ஸா என்று எழுதப்பட்ட போஸ்டர், பீட்ஸா தீம் இடம்பெறும் ஆடைகள், பொருட்கள், விளம்பரம் என எது ஒன்றை கண்டாலும் அதை சேகரிக்கத் தொடங்கினார் அவர்.

கின்னஸ் சாதனை பதிவு: 

கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி, பீட்ஸா தொடர்புடைய 669 பொருட்களை சேகரித்து வைத்திருந்தார் இந்தப் பெண். இந்நிலையில், அந்த சேகரிப்புகளை கௌரவிக்கும் விதமாக, கடந்த 24ஆம் தேதி புதன்கிழமை அன்று, இதுகுறித்த தகவல் கின்னஸ் சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

முந்தைய சாதனை முறியடிப்பு

முன்னதாக பிலாதேபியா என்னும் பகுதியைச் சேர்ந்த பிரையன் டையர் என்பவர் கடந்த 2011ஆம் ஆண்டில், பீட்ஸா தொடர்பில் 561 பொருட்களை சேகரித்து கின்னஸ் சாதனையில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், கெலின்வொர்த் அந்த சாதனையை இப்போது முறியடித்துள்ளார்.

பீட்ஸா பெண் என்று பெயர்: 

டெலினாவை அவரது நண்பர்கள் ‘பீட்ஸா பெண்’ என்றுதான் அழைப்பார்களாம். முதன் முதலாக சிவப்பு நிற பீட்ஸா டிரெஸ் ஒன்றை இவர் வாங்கியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் பீட்ஸா என பிரிண்ட் செய்யப்பட்ட டீ சர்ட், சாக்ஸ் என ஏராளமான கலெக்‌ஷன்களை வைத்துள்ளார்.

பீட்ஸா ஃபோட்டோசூட்: 

இவருக்கு பீட்ஸா மீதான காதல் எந்த அளவுக்கானது என்றால், தான் கர்ப்பமாக இருந்தபோது பீட்ஸா தீம் அடிப்படையில் ஃபோட்டோசூட் நடத்தினார். அவர் தங்கியிருந்த மருத்துவமனை அறை கூட ஃபீட்ஸா போல அலங்கரிக்கப்பட்டிருந்ததாம். இந்த சாதனை செய்ததோடு நிற்கப் போவதில்லையாம். தன்னுடைய சாதனையை தானே முறியடிக்க தொடர்ந்து பீட்ஸா பொருட்களை சேகரிக்கப் போவதாக கூறியுள்ளார் அவர்.



ALSO READ : யப்பா இவ்வளவு பெரிசா! ஐரோப்பாவில் மிகப் பெரிய டைனோசர் இதுதானாம்!


 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்