மேக்கப் இல்லாமல் அழகிப் போட்டியில் கலந்து கொண்ட பெண் - என்ன நடந்தது?
- Get link
- X
- Other Apps
இங்கிலாந்தில் நடைபெற்ற அழகு போட்டியில் முதல் முறையாக ஒரு போட்டியாளர் மேக்அப் இல்லாமல் பங்கேற்றுள்ளார்.
மிஸ் இங்கிலாந்து பட்டம் பெற, இறுதி போட்டிக்குத் தகுதி பெறும் போட்டியாளர்கள் ச்டுரில் மெலிசாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் துளி கூட மேக்கப் பயன்படுத்தாமல் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டது மட்டுமல்லாமல் அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் மிஸ் இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் இயற்கையாகவே அழகு தான். எதற்கும் காஸ்மெட்டிக் பொருட்கள் என்றெல்லாம் பலரும் கூறுவார்கள்! அது உண்மைதான் என்பதை மெலிசா நிரூபித்திருக்கிறார். லண்டனில் அரசியல் இளங்கலை படிப்பைப் படித்து வரும் மெலிசா, அழகிப் போட்டிக்காக ஸ்டண்ட் அடிக்கிறாரோ என்ற சந்தேகம் எழலாம்.
ஆனால் மெலிசா மேக்கப் மற்றும் அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவது பற்றி வித்தியாசமான கண்ணோட்டத்தைத்தான் கொண்டுள்ளார். எப்பொழுதாவது முக்கியமான நிகழ்வுகளின் போதும் மஸ்காரா லிப்ஸ்டிக் போன்றவற்றை அணியலாமே எதற்கு எப்பொழுதுமே பெண்கள் இவற்றையெல்லாம் போட்டுக் கொள்ள வேண்டும், அப்படி ஏதாவது சட்டம் இருக்கிறதா அல்லது எழுதப்படாத விதி இருக்கிறதா என்று பலமுறை கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களுக்கு இயற்கையாக என்ன குறை என்பதை வலியுறுத்தும் வகையில் மிஸ் இங்கிலாந்து போட்டியில் மேக்அப் இல்லாமல் கலந்து கொண்டு, வெற்றியும் பெற்றுள்ளார்.
இறுதிப் போட்டிக்குத் தேர்வான மெலிசா, ‘பெண்கள் சமூகத்தில் அவர்கள் மீது திணிக்கப்படும் அழுத்தத்தால், எந்த வயதாக இருந்தாலும் மேக்கப் அணிந்து கொள்கிறார்கள். தங்களின் தோற்றம், சரும நிறம் ஆகியவற்றைப் பற்றி திருப்தி அடைந்தால், யாருமே மேக்கப் அணியத் தேவையில்லை.’ என்று கூறியவர், இளம் வயதில் மேக்கப் அணிந்ததாகவும், அதனால் மிகவும் அசௌகரியமாக உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.
இதுவரை எங்குமே நடக்காத அளவுக்கு, அழகிப் போட்டிகளின் கண்ணோட்டத்தையே மாற்றியுள்ளார் மெலிசா. மேலும், வெளிப்படையாக பேசியதும் பலரையும் ஈர்த்துள்ளது.
ALSO READ : 30 செ.மீ கேப்பில் காரை பார்க்கிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த நபர் - அசத்தல் வீடியோ....
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment