நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

30 செ.மீ கேப்பில் காரை பார்க்கிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த நபர் - அசத்தல் வீடியோ....

 Guinness World Record | லண்டனை சேர்ந்த ஸ்டண்ட் டிரைவரான பால் ஸ்விஃப்ட் சமீபத்தில் தனது வெள்ளை மினி கூப்பர் காரை கொண்டு பார்க்கிங் செய்து வினோத சாதனையை செய்துள்ளார்.


இன்றைய மக்கள் தொகை பெருக்கத்தால் வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்து வருகிறது.  இதனால் வாகனங்களை நிறுத்த முடியாத நிலையும் உருவாகி உள்ளது. எனவே ஒரு இறுக்கமான இடத்தில் வாகனம் நிறுத்துவது என்பது மிகவும் சவாலான விஷயமாக இருக்கும். ஆனால், இதை சரியாக செய்து விட்டால் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு அதிகம் உள்ளது. ஆம், இப்படியொரு உலக சாதனையையும் ஒருவர் செய்து அசத்தியுள்ளார்.

லண்டனை சேர்ந்த ஒருவர் தான் இப்படியொரு வினோத சாதனையை செய்துள்ளார். ஸ்டண்ட் டிரைவரான பால் ஸ்விஃப்ட் சமீபத்தில் தனது வெள்ளை மினி கூப்பர் காரை கொண்டு பார்க்கிங் செய்து சாதனை செய்ய எண்ணியுள்ளார். இதனை 30 செ.மீ (11.8 இன்ச்) நீளமுள்ள சிறிய இடத்தில் வெற்றிகரமாக பார்க்கிங் செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பொறித்துள்ளார். பிரிட்டிஷ் மோட்டார் ஷோவில் இந்த சாதனை முறியடிக்கும் வீடியோவில், பால் ஸ்விஃப்ட் இரண்டு கார்களுக்கு இடையே உள்ள சிறிய இடைவெளியில் ஒரு சறுக்கல் மூலம் இந்த பார்க்கிங்கை செய்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இரு கார்களுக்கு இடையே இருக்க கூடிய மிக குறுகிய இடத்தில் அவரது எலெக்ட்ரிக் காரை பார்க்கிங் செய்து அசத்தியுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் போது யாராக இருந்தாலும் ஒரு நொடி அதிர்ந்தே போவார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு துல்லியமான வகையில் அவர் தனது காரை பார்க்கிங் செய்துள்ளார். பிரிட்டிஷ் மோட்டார் ஷோவின் முதல் நாளில் ஸ்விஃப்ட் அதே சாதனையை 13.8 இன்ச் என்கிற 35 செ.மீ அளவில் இந்த சாதனையை செய்திருந்தார்.


பார்க்கிங் சாதனையை செய்து முடித்த பிறகு, அதே மாதிரியான பார்க்கிங் முறையை இரண்டு முறை மீண்டும் செய்து மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். மேலும் ஸ்விஃப்ட் முதலில் 8 ஸ்பின்களுடன் சாதனை படைத்த பிறகு, நகரும் மோட்டார் பைக்கை 10 ஸ்பைன்களை சுற்றி மஞ்சள் ஃபோர்டு மஸ்டாங்கை சுழற்றினார். இந்த ஸ்டண்ட் நமது கண்களுக்கு விருந்தளிக்க கூடிய ஒன்றாக இருக்கும்.

2020 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் அலஸ்டர் மொஃபாட் என்பவர் இது போன்ற ஒரு சாதனையை செய்துள்ளார். அவர் மிகவும் இறுக்கமான இடத்தில் இந்த பார்க்கிங் சாதனையை செய்திருந்தார். அவரது சாதனையை முறியடிக்கும் வீடியோவில், மொஃபாட் தனது காரை ஒரு சிறிய இடத்தில் நிறுத்தும்போது, ​​அவரது காருக்கு முன்னும் பின்னும் உள்ளவற்றுக்கு இடையே 34 செ.மீ மட்டுமே இருந்திருந்தது. ​​இந்த பார்க்கிங் முறையும் மிகவும் புதுமையானதாக உள்ளது. இந்த சாதனைக்கு பின்னர், அவர் தனது நண்பர்களான ஜான் மற்றும் ட்ரெவர் மொஃபாட் உடன் இணைந்து இறுக்கமான டிரிபிள் கார் பாரலல் பார்க் என்ற சாதனையை முயற்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!