நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அமெரிக்காவில் ரோப் காரில் தொங்கிய 14 வயது சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பனிச் சறுக்கு விளையாடுவதற்காக ரோப் காரில் சென்ற 14வயது சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Canandaigua பகுதியில் உள்ள Bristol Mountain Ski Resort க்கு அந்த சிறுமி சென்று பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டார். பின்னர் அந்த சிறுமி ரோப் காரில் பயணித்த போது எதிர்பாராதவிதமாக பிடி நழுவியதால் தொங்கியபடி சென்றார்.

இதனைக் கண்ட அங்கிருந்தோர் உடனடியாக ஒரு பெரிய போர்வையை நாற்புறமும் விரித்து விட்டு அந்த சிறுமியை கீழே குதிக்கும்படி கூறினர். அந்த சிறுமியும் அவர்கள் கூறியபடி கீழே போர்வை மடிப்பின் மீது பத்திரமாக குதித்து உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!