நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கின்னஸ் சாதனை படைத்த 8 அடுக்கு ‘வைரப் பூ’; இந்திய இளையரின் வடிவமைப்பு

 


இதழ்கள் விரிந்த கண்ணைப் பறிக்கும் விண்மீன் மலரைப் போன்ற தோற்றமுள்ள அழகிய மோதிரம் ஒன்றில் 12,638 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள இந்த விலைமதிப்பில்லாத மோதிரத்தை விற்கும் எண்ணம் இல்லை என்கிறார் அதனை உருவாக்கிய இந்திய நகை வடிவமைப்பாளர்.

‘தி மேரிகோல்ட் - தி ரிங் ஆஃப் பிராஸ்பரிட்டி’ என அழைக்கப்படும் இந்த வட்ட வடிவ மோதிரம் 165 கிராமை விட சற்று எடை கூடுதலானது.

“இது அணியக்கூடியது, வசதியாக இருக்கும்,” என்று கூறிய 25 வயது ஹர்ஷித் பன்சால், இந்த மோதிரத்தை உருவாக்குவது தனது கனவுத் திட்டம் என்றார். 

இந்தியாவின் வைர முனையமான சூரத்தில் நகை வடிவமைப்புத் துறையில் படித்துக்கொண்டிருந்தபோது, ஈராண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டம் உருவாகியது என்றார் பன்சால்.

“10,000 வைரங்களுக்கு மேல் பதிப்பது என் திட்டம். எனது பல வடிவமைப்புகளை நானே நிராகரித்தேன். இறுதியில் இந்த வடிவமைப்பை உருவாக்கினேன்,” என்று பன்சால் குறிப்பிட்டார்.

இந்த வைரப் பூவில் எட்டு அடுக்கு இதழ்கள் இருக்கின்றன. ஒவ்வொரு இதழின் வடிவமைப்பும் வித்தியாசமானது.

இந்த மோதிரத்தை வாங்க பலர் ஏற்கெனவே விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறிய பன்சால், “இது விலை மதிப்பற்றது. இது பெருமைக்குரிய விஷயம்,” என்றார்.

இதற்கு முன்பு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த வைர மோதிரமும் இந்தியாவில் செய்யப்பட்டதுதான். அதில் மொத்தம் 7,801 வைரங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.


ALSO READ:  கொலம்பியாவில் 24 காரட் தங்க பர்கர் தயாரிப்பு, இந்திய மதிப்பில் ரூ.4100..!

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!