நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்த கோயிலில் அந்தி வேளைக்குப் பின் தங்கினால் கல்லாகிப் போவீர்களாம்!!

 இந்த பயங்கரமான மர்மத்தின் பின்னால் ஒரு துறவியின் சாபம் இருப்பதாக நம்பப்படுகிறது. இதுவரை இந்த கோயிலில் அந்தி வேளைக்குப் பிறகு யாரும் தங்கியது கிடையாது.


ராஜஸ்தான்: இந்த நவீன காலங்களிலும் சில விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. சில இடங்கள் நம்மை அதிசயிக்க வைக்கின்றன. அவற்றின் மர்மங்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றன.


கலை மற்றும் கலாச்சாரத்தால் நிறைந்த ராஜஸ்தானின் மண்ணில் புதைக்கப்பட்ட பல ரகசியங்கள் உள்ளன. இங்குள்ள ரகசியங்கள் விஞ்ஞானிகளுக்கு ஒரு சவாலாகவே இருக்கின்றன. இவற்றை பற்றி கேள்விப்பட்டு பெரிய நிபுணர்களும் வியப்பில் ஆழ்ந்து போகிறார்கள். ராஜஸ்தானில் உள்ள கிராது கோயிலும் (Temple) அப்படி பல மர்மங்கள் நிறைந்துள்ள ஒரு இடமாகும்.


இந்த கோயிலைப் பற்றி பிரபலமான ஒரு கூற்று உள்ளது. இங்கு தெரிந்தோ அல்லது தற்செயலாகவோ அந்தி வேளைக்குப் பிறகு யாராவது தங்கி விட்டால், அவர்கள் கல்லாக மாறி விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இக்கோயிலைப் பற்றிய இந்த விஷயம் சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் (Social Media) வைரல் ஆகி வருகிறது.


ALSO READ:  பாட்டிலில் அடைத்து காற்று விற்பனை! 500 மில்லி லிட்டர் Bottled Air ரூ. 2500


மனிதன் கல்லாக மாறுகிறான்

ராஜஸ்தானின் (Rajasthan) பார்மர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயிலின் பெயர் கிராடு கோயில். இந்த கோயிலைக் காண மக்கள் தொலைதூரத்திலிருந்து வருகிறார்கள். ஆனால் அந்தி நேரத்திற்கு முன்பே இங்கிருந்து சென்றுவிடுகிறார்கள். இதற்குப் பின்னால் மிகவும் பயங்கரமான காரணம் இருக்கிறது.

இந்த கோயிலில், சூரியன் (Sun) மறைந்தபின் யார் இந்த கோவிலில் தங்குகிறார்களோ அவர்கள் நிரந்தரமாக கல்லாக மாறி விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த அச்சத்தின் காரணமாக அந்தி வேளைக்குப் பிறகு யாரும் இங்கு தங்குவதில்லை.


முனிவரது சாபத்தின் உண்மை


இந்த பயங்கரமான மர்மத்தின் பின்னால் ஒரு துறவியின் சாபம் இருப்பதாக நம்பப்படுகிறது. இதுவரை இந்த கோயிலில் அந்தி வேளைக்குப் பிறகு யாரும் தங்கியது கிடையாது என்று இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். இந்த கோயில் மிகவும் அழகாக இருக்கிறது. பல இடிபாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. மக்கள் இங்கே ஒரு சுற்றுலாவுக்கு செல்வதைப் போல செல்கிறார்கள். இருப்பினும், இந்த மர்மமான கோவிலின் மீது மக்களுக்கு ஒரு அச்சமும் உள்ளது. கோயிலின் பெயரைக் கேட்டாலே சிலர் நடுங்குகிறார்கள்.


ALSO READ:   எலக்ட்ரிக் முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட விங்சூட் : மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பறந்து இளைஞர் சாதனை.


அச்சுறுத்தும் கோயிலின் மர்மம்


இத்தகைய அச்சுறுத்தும் மர்மம் இங்கு இருந்தாலும், இந்த கோயிலின் அழகு மக்களை தன்னை நோக்கி ஈர்க்கிறது. இதன் காரணமாக, மக்களுக்காக இங்கு பகல் வேளைகளில் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.


இருப்பினும், மக்கள் கோயிலிலிருந்து அந்தி சாயும் முன் திரும்பி விடுகிறார்கள். சிலரோ அச்சம் காரணமாக இந்த கோயிலை தொலைவிலிருந்தே பார்த்துவிட்டு சென்று விடுகிறார்கள். பலருக்கு இந்த கோயிலுக்குள் செல்ல துணிச்சல் வருவதில்லை. 


ALSO READ:   “கதை நிஜமானது..” தண்ணீரை புத்திசாலிதனமாக குடித்த குருவி..

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!