நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குண்டாக இருப்பதால் அசிங்கமாக நினைக்கிறீர்களா..? மற்றவர்களுடன் ஒப்பிட்டு உங்களை நீங்களே வெறுக்கிறீர்களா..? உங்களுக்கான சிறந்த பதில் இதோ...

 

கேள்வி : எனக்கு பாடி ஷேமிங் பிரச்னை இருக்கிறது. நான் மிகவும் குண்டாகவும், சப்பியாகவும் இருப்பேன். ஆனால் என் பார்ட்னர் என்னை ஒரு போதும் குறை கூறியதில்லை. இருப்பினும் என்னையே நான் அருவருப்பாக நினைக்கிறேன். இதனால் நான் என்னை வெறுக்கிறேன். எனக்கு நான் ஒரு போதும் அழகாகத் தெரிந்ததே இல்லை. உங்களுக்கு தெரிந்துகொள்ள விருப்பம் இருந்தால் இன்னும் நிறைய பகிர்ந்துகொள்வேன். என் உடல் குறித்த கவனம் தற்போது அதிகரித்துவிட்டது. என் துணையின் முன் ஆடைகளின்றி நிற்பதற்குக் கூட அசிங்கமாக உணர்கிறேன். ஆனால் ஒரு போதும் அவர் என்னை தவறாக கூறியதே இல்லை. இந்த உடல் குறித்த கவலை என்னை துணையிடமிருந்து உடலளவில் விலக்கி வைத்துவிடுமோ என்ற அச்சமும் உள்ளது.

பதில் : நான் பேசும் வார்த்தைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த வாக்கியம் "Beauty lies in the eyes of the beholder". உங்கள் அழகு, ஈர்ப்பு, உடலமைப்பு , நிறம் , உயரமா, குட்டையா என்பதெல்லாம் பார்ப்பவர்களின் கண்களைப் பொருத்தது. யாரேனும் நீங்கள் அழகு என்று நினைத்துப் பார்த்தால் அழகாகத் தெரிவீர்கள். நீங்களே கூறினீர்கள் உங்களுடைய துணை ஒரு போதும் உங்களை அழகற்றவள் என ஒருபோதும் கூறியதில்லை என்று...நீங்கள் அழகாகவும், ஈர்ப்புக் கொண்டவராகவும் இருப்பதனால்தான் அவர் உங்களுடன் இருக்கிறார். உங்களைக் காதலிக்கிறார். நீங்கள் வேண்டும் என நினைக்கிறார்.

நீங்கள் ஒரு துணிக்கடைக்கோ அல்லது ஃபேஷன் ஸ்டோருக்கோ ஒரு சட்டை வாங்கப் போகிறீர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள். அங்கு அனைத்து வகையான சட்டைகளும் ராக்குகளில் தொங்கவிடப்பட்டுள்ளன. அதில் நீல நிற சட்டை உங்களுக்கு மிகவும் பிடித்துப்போய் எடுக்கிறீர்கள். அது பார்க்க மிகவும் அழகாகவும். ஸ்டைலிஷாகவும் இருப்பதால் அதை விலை கொடுத்து வாங்குகிறீர்கள்.


இப்போது நீங்கள் எடுக்காமல் விட்ட மற்ற சட்டைகளை பற்றி நினைத்துப்பாருங்கள். அங்கிருந்த ஒரு மஞ்சள் நிற ஆடை உங்களுக்கு முற்றிலும் பிடிக்காமல் இருந்திருக்கும். மேலும் இப்படி நினைக்கிறீர்கள் “ கடவுளே என்ன நிறம் இது..என்ன டிசைன் இது, கடைக்காரர் இலவசமாகக் கொடுத்தாலும் நான் வாங்க மாட்டேன் என நினைத்துக்கொள்கிறீர்கள். நிச்சயம் உங்கள் வாழ்நாளில் இப்படியான அனுபவத்தை துணிக்கடையில் பெற்றிருப்பீர்கள்.

ஒரு நிமிடம் நினைத்துப்பாருங்கள். நீங்கள் இலவசமாக கொடுத்தால் கூட வாங்க மாட்டேன் என நினைக்கும் அப்படிப்பட்ட சட்டையை அவர்கள் ஏன் அந்த ராக்கில் தொங்க விட்டிருக்கிறார்கள்..? ஏன் அதன் விலையும் நீங்கள் வாங்கி நீல நிற சட்டைக்கான அதே விலையை பதித்திருக்கிறார்கள்..? எதனால் அந்த கடை நிர்வாகி அந்த சட்டையை பணம் கொடுத்து வாங்கி கடையில் தொங்கவிட்டிருக்கிறார்..?

ALSO READ :குளிர் அலை நேரத்தில் மது அருந்த வேண்டாம்: இந்திய வானிலை மையம் ஏன் இப்படி எச்சரிக்கிறது?

ஏனெனில் உங்களைப் போலவே ஒருவர் அங்கு வரக்கூடும். அவர்களுக்கு அந்த மஞ்சள் நிற சட்டை ’வாவ் எவ்வளவு அற்புதமான ஆடை’ என நினைத்து வாங்கும் வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஏன் நீங்கள் வாங்கிய அந்த நீல நிற சட்டை கூட யாரோ ஒருவரால் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். நீங்கள் வாங்கிய அதே மகிழ்ச்சியுடன் அந்த மஞ்சள் நிற சட்டையை யாரேனும் வாங்கக் கூடும். அதை அணிவார்கள். அவர்களுக்கு அந்த மஞ்சள் நிற சட்டை பக்காவாக பொருந்தியிருக்கும். அவர்களை மிக அழகாகக் காட்டும். நீங்கள் வாங்கிய நீல நிற சட்டையைக் கூட நீங்கள் நினைத்தது போல் கடவுளே இந்த ஆடையை இலவசமாகக் கொடுத்தால் கூட வாங்க மாட்டேன் என நினைத்திருக்கலாம். எனவே இப்படித்தான் ஒரு கடைக்கு பலதரப்பட்ட விருப்பங்களுடன் வாடிக்கையாளர்கள் வரக்கூடும்.


அப்படித்தான் நீங்களும் உங்களைக் காண்பவர்களின் கண்களைப் பொருத்து நீங்கள் ஈர்ப்புக் கொண்டவராகவும், அருவருப்பு கொண்டவராகவும் இருக்கலாம். உலகிலேயே இதுதான் வசீகரிக்கும் உடல் , அருவருக்கத்தக்க உடல் என்று வரையறை இல்லை.


எனவே அழகு என்பது பார்ப்பவர்களின் கண்களில்தான் இருக்கிறது. உங்கள் கண்களிலும் இருக்கிறது. ஏன் உங்களை நீங்களே பார்க்கும்போது உங்களுக்குள் இருக்கு அழகிய மனதை பார்த்ததில்லையா..? இல்லை எனில் ஏன் இதுவரை இல்லை..? இப்படிப்பட்ட ஸ்டைல் , இப்படிப்பட்ட உடலமைப்புதான் வசீகரிக்கும் என ஏதேனும் கருத்து உங்களுக்குள் இருக்கிறதா..? அப்படி இருந்தால் அப்போது அதை நோக்கி நகருங்கள். மாற்றத்தை கொண்டு வாருங்கள்.

ஒன்றை மட்டும் நினைத்துக்கொள்ளுங்கள். இந்த மாற்றம் மற்றவர்களுக்காக அல்ல மற்றவர்களைப் போல் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக அல்ல..நல்ல ஆடை உடுத்துங்கள். நல்ல மேக்அப் போட்டுக்கொள்ளுங்கள். உடற்பயிற்சிக் கூடம் செல்லுங்கள். இவையெல்லாம் உங்களுக்கு நீங்கள் அழகாகத் தெரிய வேண்டும், உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறிய வேண்டும் என்பதற்காக மட்டுமே...உங்களிடம் நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள் ’நான் மிகவும் அழகு’. செக்ஸியாக இருக்கிறேன் என உணருங்கள். உங்கள் உடலை நீங்களே பாராட்டி ரசியுங்கள். உங்களுக்கு நீங்களே ரிவார்டுகள் கொடுத்துக்கொள்ளுங்கள். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்கள்தான் சிறந்த தோழி..!


ALSO READ :விண்வெளி வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பான்.. குடிநீர் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் சாதனம்..


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!