நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Coronavirus தடுப்பூசியால் பாதுகாக்கப்படும் முதல் பசிபிக் நாடு எது தெரியுமா?

 பசிபிக் பகுதியில் அமைந்துள்ள வைரஸ் இல்லாத பலாவ் (Palau) நாடு, COVID-19 க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட முதல் நாடாக மாறக்கூடும். மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நாடு பலாவ் குடியரசு. இங்கு சுமார் 18,000 மக்கள் தொகை வசிக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு ஒன்றுகூட பதிவாகாத நாடு இது. அதேபோல், கொரோனா வைரஸுக்கு (Coronavirus) எதிராக தடுப்பூசி போட்ட முதல் நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.


பசிபிக் பகுதியில் அமைந்துள்ள வைரஸ் இல்லாத பலாவ் (Palau) நாடு, COVID-19 க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட முதல் நாடாக மாறக்கூடும். மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நாடு பலாவ் குடியரசு. இங்கு சுமார் 18,000 மக்கள் தொகை வசிக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு ஒன்றுகூட பதிவாகாத நாடு இது. அதேபோல், கொரோனா வைரஸுக்கு (Coronavirus) எதிராக தடுப்பூசி போட்ட முதல் நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.


கடந்த வார இறுதியில் நாடு மாடர்னா தடுப்பூசி (கோவாக்சின்) பலாவ் குடியரசு (Republic of Palau). அங்கு தடுப்பூசி இயக்கம் ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கியது, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்குவதற்கு முன்பே, பலாவ் குடியரசு கடந்த ஆண்டு ஜனவரியில் எல்லைக் கட்டுப்பாட்டைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டது. 2020 மார்ச் மாதத்தில் தன் நாட்டு எல்லைகளை மூடிவிட்டது. ஏப்ரல் மாதத்தில் முழு பலத்துடன் தொடங்கிய கட்டுப்பாடுகளுடன் அந்த நாடு கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்னேறி, கொரோனா வைரஸின் (Coronavirus) கொடும்பிடியில் இருந்து தப்பியது.

இதுவரை பலாவ் குடியரசில் செய்யப்பட்ட அனைத்து கொரோனா பரிசோதனைகளும் எதிர்மறை முடிவையே காண்பித்துள்ளது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை.  

இந்தியா (India) உள்ளிட்ட பல நாடுகள் பலாவ் குடியரசிற்கு பரிசோதனை கருவிகளை அனுப்பியுள்ளன. மே மாதத்திற்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடித்துவிட முடியும் என்று அந்நாடு நம்புகிறது, ஆனால் அமெரிக்காவிலிருந்து எவ்வளவு விரைவாக தடுப்பூசிகள் கிடைக்கும் என்பதைப் பொறுத்து தான் இது முடிவு செய்யப்படும்.  

அமெரிக்காவிலிருந்து சனிக்கிழமையன்று 2,800 டோஸ் மாடர்னா தடுப்பூசிகள் பலாவ் குடியரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு சுகாதார அமைச்சர் எமாயிஸ் ராபர்ட்ஸ் (Emais Roberts) நன்றி தெரிவித்துள்ளார்.  

பலாவ் அமெரிக்க அரசாங்கத்தின் "Operation Warp Speed" திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அமெரிக்க தூதர் ஜான் ஹென்னெஸ்ஸி-நிலாண்ட் (John Hennessey-Niland), பலாவ் குடியரசை "நண்பர் மற்றும் பங்குதாரர்" என்று விவரித்தார். அடுத்த மூன்று மாதங்களில் 30,000 டோஸ் பலாவ் குடியரசுக்கு அனுப்பி வைக்கப்படும். 

கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்கா 20 மில்லியனுக்கும் அதிகமான தொற்று வழக்குகளையும் 353,620 க்கும் மேற்பட்ட இறப்புகளையும் பதிவு செய்துள்ளது. இந்த வைரஸ் உலகளவில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களை பலி வாங்கியுள்ளது.  


ALSO READ : கொரோனா தொற்று உடைய பெண்ணுக்கு பிறந்த 4 குழந்தைகள்!

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!