நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்தியாவில் ஒரு கிலோ மாழ்பழம் ரூ. 2.70 லட்சத்திற்கு விற்பனை: அரிதினும் அரிதான அந்த மாழ்பழம் எவை தெரியுமா?

இந்தியாவில் அரிதினும் அரிதாக விளையும் ஜப்பான் வகை மியாசாகி மாம்பழம், ஒரு கிலோ ரூ.2.70 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மத்திய பிரதேசம் மாநிலம், ஜபால்பூர் பகுதியில் ஒரு தம்பதியினர் தங்களது தோட்டத்தில் சர்வதேச மற்றும் கவர்ச்சியான பழங்கள் சந்தையில் மிக விலையுர்ந்த விலைக்கு விற்கப்படும் இரண்டு ஜப்பான் வகை மியாசாகி மா மரங்களை பயிரிட்டுள்ளனர். விலை உயர்ந்த மியாசாகி மாம்பழங்களை பாதுகாப்பதற்காக அந்த தம்பதியினர், நான்கு காவலர்களையும், ஆறு நாய்களையும் தோட்டத்தின் காவலுக்கு வைத்துள்ளனர். 

சர்வதேச சந்தையில் அதிக விலைக்‍கு விற்கப்படும் இந்த மாம்பழங்களை கடந்த ஆண்டு தங்கள் தோட்டத்திற்குள் புகுந்த திருடர்கள் மாம்பழங்களை திருடிச் சென்றதால் தற்போது காவலர்களையும், நாய்களையும் காவலுக்கு வைத்துள்ளதாக தெரிவித்த தம்பதியினர், கடந்த ஆண்டு ஒரு கிலோ மாம்பழத்தை ரூ.2.70 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளனர். 

ஜபால்பூர் பகுதியில் வசிக்கும் சங்கல்ப் பரிஹாஸ் அவரது மனைவி ராணியும் ஒரு முறை சென்னைக்கு ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது ஒருவர் சில மா மரக்கன்றுகளை வழங்கியுள்ளார். இதில், இரண்டு மரக்கன்றுகளை தங்கள் தோட்டத்தில் நட்டுள்ளனர். அவை சாதாரண மா மரங்களாக வளரும் என்று நம்பி நட்டு வைத்துள்ளனர். அவை சில ஆண்டுகளுக்கு பின்னர் ஆச்சரியத்து அளித்துள்ளது. மாகன்றுகள் நன்றாக வளர்ந்து காய்க்கத் தொடங்கியது. அவை மஞ்சள் அல்லது பச்சை நிறமாக இல்லாமல் ரூபி சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது. இதனைக் கண்ட அந்த தம்பதியினர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். 

அரிய மாம்பழத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர், மேலும் அவை குறித்து ஆராய்ச்சி செய்ததில் தம்பதியினருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது, அந்த மாம்பழம் ஜப்பான் வகையைச் சேர்ந்த மியாசாகி மாம்பழம் என்றும், அவற்றுக்கு சர்வதேச மற்றும் கவர்ச்சியான பழங்கள் சந்தையில் அதிக தேவை உள்ளதாகவும், அவை விலையுயர்ந்த மாழ்பழங்களின் ஒன்று என்ற தகவலை அறிந்து ஆச்சரியத்தில் மகிழ்ந்துள்ளனர். 

கடந்த ஆண்டு, சர்வதேச சந்தையில் மியாசாகி மாம்பழத்தை ஒரு கிலோ ரூ.2.70 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர். 

தற்போது இந்த தமபதியினர் மாம்பழங்களுக்கான ஆர்டர்களைப் பெறத் தொடங்கியுள்ளதுடன் பல சலுகைகளில் அறிவித்துள்ளதாக கூறுகின்றனர். குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு ஒரு மாம்பழம் ரூ.21 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாம்பழங்களில் பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, அவை பார்வை குறைபாடுகளை போக்குவதில் சிறந்த பங்குவகிக்கிறது. இந்த அரிய வரை சிவப்பு மாம்பழங்கள் ஜப்பானிய நகரமான மியாசாகியில்தான் முதன்முதலில் பயிரிடப்பட்டது.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!