நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மூக்கின் மூலம் செல்போன் இயக்கி, டிக் டாக்கில் டான்ஸ் வீடியோ பதிவிட்ட நாய் - வைரல் வீடியோ!

 டிக் டாக் மூலம் பிரபலமானவர்களுக்கு, சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக புகழ் வெளிச்சம் கிடைத்தது.


டிக்டாக் போன்ற ஆப்ஸ்களின் வருகைக்கு பிறகு நாம் அனைவரும் ஹீரோ தான் என்ற எண்ணம் ஏற்படத் துவங்கியுள்ளது. பாடல் பாடுவது, நடனம் ஆடுவது என பலருக்கும் தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஒரு மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறது இந்த டிக்டாக்.

முன்பெல்லாம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த மக்களுக்கு சினிமா, சீரியல் என ஒரு சில வாய்ப்புகளே இருந்தன. அதிலும் தங்களுக்கான வாய்ப்புகளைப் பெறுவது மிகவும் கடினம். இதனை மனதில் வைத்தே பலரும் தங்கள் திறமைகளைத் தங்களுக்குள்ளே மூடி மறைப்பதும் நடந்தது. அதன் பிறகு யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் வருகையால் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு உருவானது.
டிக்டாக் அதில் உச்சம் என்று சொல்லலாம். டிக் டாக் மூலம் பிரபலமானவர்களுக்கு, சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக புகழ் வெளிச்சம் கிடைத்தது. டிக் டாக் செயலியின் மூலம் புகழடைந்தவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் குவியத் துவங்கின. டிக் டாக் தடை செய்யப்பட்டிருந்தாலும், அதற்கு இணையான செயலிகள், இன்ஸ்டாகிராம் ரீல் என பிரபலங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த உலகம் போன்று, டிக் டாக்கும் மனிதர்களுக்கானது மட்டும் இல்லை. எல்லா உயிரினங்களுக்கானதும் கூட. விலங்குகள் உட்பட மற்ற உயிரினங்களுக்கும் திறமைகளும் இருக்குமல்லவா. அதற்கும் டிக் டாக் கை கொடுத்திருக்கிறது. டிக் டாக் செயலியில் நாய் ஒன்று, பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடியோவைப் பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டிருக்கிறது.

சீக்ரெட் என்ற பெயருடைய ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு நாய், டிரைபாடில் வைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போனை தனது மூக்கின் மூலம் தனக்கு ஏற்றார் போல் செட் செய்து வீடியோ ஷூட் செய்கிறது. பின் பாடல் ஒன்றுக்கு நடனமாடுகிறது. அதனை டிக் டாக் செயலியில் பதிவிட அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து, அந்த வீடியோ வைரலானது. பின்னர் அந்த வீடியோவை நாயின் உரிமையாளர் மேரி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தான் சீக்ரெட்டிற்கு வீடியோவை எப்படி எடுப்பது, ஃபோட்டோ எடுப்பது போன்றவற்றை சொல்லிக் கொடுக்க அதனைக் கற்றுக்கொண்டு சீக்ரெட் வீடியோவைப் பதிவு செய்திருக்கிறது.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகள் குவிந்திருக்கிறது. இது தாங்கள் பார்த்த சிறந்தவைகளில் ஒன்று என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த கடினமான காலத்தில் சீக்ரெட் எனும் நாயின் கியூட் வீடியோ பலருக்கும் தங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைத்திருக்கிறது. டிக் டாக் செயலிக்கு இந்தியாவில் தடை இருந்தாலும் சில நாடுகளில் ஜோராக செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவில் தற்போது இந்த செயலிக்கு தடை நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!