நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆஸ்திரேலியாவில் ஆல்கஹால் இல்லாத பீர், ஒயின் மதுபானம் அறிமுகம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி வடக்கு பகுதியில் உள்ள கடற்கரை ஓரத்தில் தொழில்முனைவோரான ஐரீன் பால்கோன் முதன்முதலாக ஆல்கஹால் இல்லாத பீர் மற்றும் ஒயின் கடையை திறந்துள்ளார்.
சிட்னி:

பீர் மற்றும் ஒயின் மதுபானங்களில் குறைந்த அளவிலான ஆல்கஹால் உள்ளது. சில நாடுகளில் ஆல்கஹால் இல்லாத பீர் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக ஆல்கஹால் இல்லாத பீர் மற்றும் ஒயின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி வடக்கு பகுதியில் உள்ள கடற்கரை ஓரத்தில் தொழில்முனைவோரான ஐரீன் பால்கோன் முதன்முதலாக ஆல்கஹால் இல்லாத பீர் மற்றும் ஒயின் கடையை திறந்துள்ளார். இது ஆஸ்திரேலியாவின் ஆல்கஹால் அல்லாத முதல் மதுபானக்கடை ஆகும்.

இதுகுறித்து ஐரீன் பால்கோன் கூறும்போது, நான் ஒரு பெரிய மதுபான கடைக்கு எதிரே என் கடையை திறந்திருக்கிறேன். ஒரு தொழில் துறையை சீர்குலைக்க வந்திருக்கிறேன். தற்போது ஆல்கஹால் இல்லாத மதுபானத்தை அனைவரும் மகிழ்ச்சியாக வாங்கி செல்கிறார்கள்” என்றார்.

கடந்த 20 ஆண்டுகளில் 18 வயதிலிருந்து 24 வயதுடைய ஆஸ்திரேலியர்கள் குடிக்காமல் இருப்பது இரட்டிப்பாகி உள்ளதாக லா டிரோப் பல்கலைக்கழகத்தின் மதுபான கொள்ளளவு ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் மதுபான பழக்கம் சற்று மாறி கொண்டு வருவதாக தெரிகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அங்கு ஆல்கஹால் இல்லாத மதுபானங்கள் மிகவும் பிரபலமாகி வருகிறது.

இந்த மதுபானங்களை தயாரிக்கும் அலிஸ்டர் வைட்லி கூறும்போது, “நாம் ஒரு பெரும் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். மதுபான நிறுவனங்கள் விற்கும் மதுபானங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் ஆல்கஹால் அல்லாத பானங்களையும் நாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!