நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பட்டாம்பூச்சி பூங்கா

ஆரஞ்ச் மற்றும் கருப்பு நிறம் கொண்ட ‘மொனார்ச்' என்று அழைக்கப்படும் ராஜா பட்டாம்பூச்சிகள் அமெரிக்காவில் இருந்து பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து மெக்சிகோவிற்கு இடம்பெயர்கின்றன. இந்த நிகழ்வு வருடந்தோறும் நடக்கிறது.
அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கும், மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கும் கூட்டம் கூட்டமாக படையெடுத்து, இடம்பெயர்கின்றன. பட்டாம்பூச்சிகளின் படையெடுப்பிற்கு ஏதுவாக மெக்சிகோ நாட்டில் பிரத்யேக பூங்காவை உருவாக்கி இருக்கிறார்கள்.

4 ஹெக்டர் பரப்பளவில் அமையப்பெற்றிருக்கும் அந்த பட்டாம்பூச்சி பூங்காவில், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பட்டாம்பூச்சிகள் வந்து ஓய்வெடுக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாம்பூச்சிகளின் வரத்து 255 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இங்கு கூட்டம் கூட்டமாக வரும் பட்டாம்பூச்சிகள் தங்களது மூதாதையர்கள் அமர்ந்த அதே மரங்களில் தான் இன்றும் அமர்ந்து முட்டையிடுகின்றன.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!