நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடல் எடையை குறைக்க உதவும் "மேஜிக் பானம்"

என்ன செய்தாலும் உடல் எடை குறையவில்லையே என நம்மில் பலர் பலவிதமான கடின முயற்சிகளை கையிலெடுத்தும் வருத்தப்படுவது வழக்கம்.

உடல்பருமன் பலவிதமான நோய்களுக்கும் வழிவகுப்பதோடு, வீண் பணம் செலவு, மன சோர்வு, தவறான உணவுப் பழக்கம் ஆகியவற்றுக்கும் வழிவகுக்கிறது.

ஆனால் நாம் அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தும் சீரகம் மற்றும் ஓமம் ஆகியவை உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இந்த இரண்டையும் ஒன்றாக உட்கொள்வதன் மூலம், நீங்கள் மிக வேகமாக உடல் எடையை குறைக்க முடியும். சீரகத்தில் அழற்சி எதிர்ப்பு
 ( Anti-Inflammatory) கூறுகளும், ஓமத்தில் இரும்பு, கால்சியம், ஃபைபர், பாஸ்பரஸ் தவிர, பல ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சீரகம் மட்டும் ஓமத்தை ஒன்றாக போடவும். அவை பாதியான உடன் அதனுடன் தேன் சேர்த்து பருகினால் விரைவில் உடல் எடை குறையும்.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!