நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பால்வெளி விண்மீன் மண்டலத்தில் அடையாளம் தெரியாத புதிய புதிர் கண்டுபிடிப்பு.. விஞ்ஞானிகள் குழப்பம்..

பால்வெளி விண்மீன் மண்டலம் முழுவதும் ஒரு நம்பமுடியாத பாரிய வாயு இழையை விஞ்ஞானிகள் குழு சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது. இது மிகவும் பெரியது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுவரை இந்த மிகப்பெரிய வாயு இழைகளை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்பதே விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்குப் பேரும் அதிர்ச்சியளிக்கும் செய்தியாக இருக்கிறது. விஞ்ஞானிகளுக்கே இது நம்புவது கடினமாக இருக்கிறது.
பால்வெளி விண்மீன் மண்டலத்தில் அடையாளம் தெரியாத புதிய புதிர்
விண்வெளி வாயுவின் இந்த பாரிய வாயு இழைகள் மிகவும் திகைப்பூட்டும் வகையில் பெரியதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் பால்வெளி விண்மீன் மண்டலத்தில் என்ன பார்க்கிறார்கள் என்று கூட அவர்களால் யூகிக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர். உண்மையில் விஞ்ஞானிகள் இதை நமது பால்வெளி விண்மீன் மண்டலத்தில் கண்டது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
"கட்டைல் (Cattail)" என்று அழைக்கப்படும் அடையாளம் கண்டுபிடிக்கப்படாதவாயு இழை
விஞ்ஞானிகளால் இன்னும் சரியாக அடையாளம் கண்டுபிடிக்கப்படாத இந்த வாயு இலைகளை என்னவென்று அடையாளம் காண முயன்று வருகின்றனர். ஒருபுறம், சயின்ஸ் அலெர்ட்டின் படி இது "கட்டைல் (Cattail)" என்று அழைக்கப்படும் அடையாளம் கண்டுபிடிக்கப்படாத சில இழை கட்டமைப்பாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆனால், கட்டைல் பால்வெளியின் சுழல் கரங்களில் ஒரு பகுதியாக இருப்பது சமமான சாத்தியம் என்று கூறப்பட்டுள்ளது.
நமது பிரபஞ்சத்தைப் பற்றி நமக்கு இவ்வளவு தான் நமக்கு தெரியுமா?
நாம் வாழும் இந்த பால்வெளி பிரபஞ்சத்தின் சிறிய மூலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய கண்டுபிடிப்பால், நாம் எவ்வளவு குறைவாக நமது பிரபஞ்சத்தைப் பற்றிப் புரிந்துகொண்டுள்ளோம் என்பதை இந்த பாரிய விளக்கு உருவம் நமக்கு விளக்கியுள்ளது. இருப்பினும், இந்த புதிய கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு ஒரு பெரும் குழப்பமாகவே இருக்கிறது. இது எங்கிருந்து வந்தது? இத்தனை நாள் என் நம்மால் அடையாளம் காண முடியாமல் போனது என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.
பல கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில்கள் இல்லை
இப்படிப் பல கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில்கள் எதுவுமே கிடைக்கவில்லை என்பதனால், இது விஞ்ஞானிகளுக்கு ஒரு புதிராக மாறியுள்ளது. இது மேற்பரப்பில், கட்டைல் ​​விண்மீனின் ஒட்டுமொத்த கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறதா அல்லது அதன் சொந்த விஷயமா என்பதைத் தீர்மானிக்க எளிதான வழிகள் ஏதாவது உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆனால் நான்ஜிங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதன் சிறந்த தோற்றத்தை ஜூம் செய்ய முடிந்தது.
அடையாளம் காண்பதில் இத்தனை சிக்கலா?
அண்டப் பொருட்களின் அளவு மற்றும் பூமியிலிருந்து தூரத்தை அளவிடுவது போன்ற சில ஆய்வுகள் காஸ்மிக் பொருட்களில் மீது நடத்தப்படும் போது, நமது சொந்த விண்மீன் மண்டலத்தில் கூட சில பொருட்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளது என்று சயின்ஸ்அலர்ட் குறிப்பிடுகிறது. மேலும், இந்த பாரிய வாயு இழை கட்டைல் உடனான ​​எந்த விளக்கத்துடனும் சரியாக ஒத்துப்போகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகளுக்கு இன்னும் குழப்பமாக உள்ளது
முழுமையான விண்மீனின் மிகப்பெரிய மற்றும் தொலைதூர சுழல் கை இதுவாகும், ஆனால் அதன் சீரமைப்பு பால்வீதியின் மற்ற கட்டமைப்புகளுடன் சரியாகப் பொருந்தவில்லை, எனவே என்ன நடக்கிறது என்பதைத் தீர்மானிப்பது உண்மையில் கடினமாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்."இந்த அமைப்பு விண்மீன் வட்டின் வளைவை முழுமையாகப் பின்பற்றவில்லை என்பது குழப்பமாக உள்ளது." தற்போதுள்ள தரவுகளுடன் இந்த கேள்விகள் திறந்த நிலையில் இருந்தாலும், விண்மீன் அமைப்பைப் பற்றிய நமது புரிதலுக்கான அவதானிப்புகள் புதிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன.




Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!