நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வரலாற்றில் முதன்முறையாக கிரீன்லந்து பனிக்கட்டியின் உச்சியில் மழை

கிரீன்லந்து பனிக்கட்டியின் உச்சியில், வரலாற்றில் முதன்முறையாக விஞ்ஞானிகள் மழைப்பொழிவைக் கண்டுள்ளனர்.

உலகின் அதிகரிக்கும் வெப்பநிலையால் அங்குள்ள பனிக்கட்டி வேகமாக உருகி வருவதற்கான மற்றோர் அறிகுறி அது.

கடந்த வாரம், 3.2 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள பனிக்கட்டியின் சிகரத்தில், பல மணி நேரம் மழை பெய்தது.

9 மணி நேரத்துக்கு, வெப்பநிலை உறைநிலைக்கு மேல் இருந்தது.

பனிக்கட்டியின் மேற்பரப்பில் உள்ள நீர், சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதற்கு மாறாகச் சூரிய ஒளிபட்டு உருகுவதாய் ஆய்வாளர்கள் கூறினர்.

கடந்த 20,30 ஆண்டுகளாக உலகக் கடல் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

அதில் 25 விழுக்காட்டு உயர்வுக்கு, கிரீன்லந்தின் பனிக்கட்டியில் இருந்து உருகும் நீரே காரணம் என்று கூறப்பட்டது.

உலக வெப்பநிலை அதிகரித்து வரும் வேளையில், அந்த விகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!