நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வசீகரமான முகத்தைப் பெற தினமும் இந்த தண்ணீரில் முகம் கழுவினால் போதும். முகத்தில் இருக்கும் மூதேவி முகத்தை விட்டு அகற்ற படுவாள்.

என்னதான் குளித்தாலும் சில பேருக்கு முகத்தில் இருக்கக்கூடிய வாட்டம் மட்டும் போகவே போகாது. குளித்து அலங்காரம் பண்ணி அழகாக தெரிந்தாலும் முகம் வாடி இருக்க கூடியவர்களுக்கு சொல்லப்பட்டுள்ள பதிவுதான் இது. 
மிக மிக சுலபமான முறையில் கிடைக்கக்கூடிய மகத்துவம் வாய்ந்த இந்த பொருட்களை இரண்டு சிட்டிகை தண்ணீரில் கலந்து, அந்த நீரில் முகம் கழுவி வந்தால் உங்களுடைய முகம் பொலிவாகும். முகம் வசீகரத் தன்மையைப் பெறும். எல்லோருக்கும் பிடித்த முகமாக உங்கள் முகமும் மாற வேணும்னா, இதை ட்ரை பண்ணி பாருங்க.
முகத்துக்கு என்னதான் அழகு சாதன பொருட்களை போட்டு அழகுபடுத்திக் கொண்டாலும் சரி, நம்மை அழகாக காட்ட எத்தனை அணிகலன்கள் போட்டு இருந்தாலும் சரி, ஒருவருடைய முகத்தில் எப்போதும் இருக்க வேண்டிய ஒரு விஷயம் சிரிப்பு. யாரொருவர் வாய் நிறைய சிரித்துக் கொண்டே இருக்கிறார்களோ, அவர்களுடைய முகம் அழகாக இருக்கும். கூடவே உடலும் ஆரோக்கியம் பெறும். அந்த முகத்தில் நிச்சயமாக மூததேவி தங்க மாட்டாள். இது முதல் விஷயம்.

இரண்டாவதாக மகத்துவம் வாய்ந்த அந்த இரண்டு பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். வசம்பு பொடி, வெட்டிவேர் பொடி இந்த இரண்டு பொடியும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது. இரண்டு பொடியையும் வாங்கி ஒன்றாக கலந்து ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் ஒரு ஸ்பூன் இந்த பொடியை கலந்து விட்டு குளித்தால் உங்கள் முகமும் உடம்பும் பொலிவடையும்.
குளிக்கின்ற தண்ணீரில் இந்தப் பொடியை கலக்க முடியாது என்றாலும் ஒரு ஜக் அளவு தண்ணீரில் 2 சிட்டிகை இந்த பொடியை போட்டு முகத்தை மட்டும் அலம்பிக் கொண்டால் கூட போதும். முகம் பொலிவடையும். காலை மாலை இருவேளையும் இந்தத் தண்ணீரில் முகத்தை கழுவி வாருங்கள். கலையிழந்த முகம் கூட கலையாக மாறும். வசீகரத் தன்மை பெறும்.

சிலபேருக்கு எதிர்மறை ஆற்றலின் தாக்கத்தினால் உடல்வலி ஏற்படும். யாரோ அடித்துப்போட்டது போல ஒரு உணர்வு இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த பொடி சேர்த்த தண்ணீரில் 2 சிட்டிகை மஞ்சள் பொடியையும் சேர்த்து குளித்து விடுங்கள். உங்களை பிடித்த அத்தனை தோஷங்களும் உங்கள் உடம்பை விட்டு விலகிவிடும் ஒரு முறை குளிக்கும் போது நல்ல வித்தியாசத்தை உணரலாம்.
வீட்டில் வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை தூபம் போடும் போது சாம்பிராணி தூபத்துடன் இந்த பொடியை அரை ஸ்பூன் சேர்த்து போட்டாலும் வீட்டில் இருக்கும் துர்சக்திகள் வெளியேற்றப்படும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய மிக மிக சுலபமான முறையில் கிடைக்கக்கூடிய வசம்பு பொடியும் வெட்டிவேர் பொடியும் உங்கள் வாழ்க்கை சூழ்நிலையை நல்லபடியாக மாற்றக்கூடிய சக்தி கொண்ட பொடி என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!