வரவிருக்கும் ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது சில வாடிக்கையாளர்கள் இந்த விலையுயர்ந்த ஸ்வீட்ஸை ஆர்டர் செய்துள்ளனர்.
வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் ரக்ஷாபந்தன் மற்றும் ஜென்மாஷ்டமி போன்ற பண்டிகைகளின் காலம் நெருங்கி வரும் நிலையில், குஜராத்தின் சூரத் நகரில் ஒரு கிலோ 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் ஸ்வீட் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இனிவரும் நாட்களில் பண்டிகை காலங்கள் நெருங்கி வருகிறது, இந்த பண்டிகையின் போது ஸ்வீட்ஸ்களுக்கு அதிக தேவை உள்ளது. இதன் காரணமாக ஸ்வீட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. இந்த நிலையில் சூரத்தின் கோடோட் சாலை பகுதியில் அமைந்துள்ள ஒரு ஸ்வீட் கடையில் பல்வேறு புதிய ஸ்வீட்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன, அதில் சிறப்பு தங்கத்தை பயன்படுத்தி தயார் செய்யப்படும் ஸ்வீட்ஸ் தான். இந்த ஸ்வீட் ஒரு கிலோ ஒன்பதாயிரம் ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சியடையலாம், ஆனால் உண்மைதான்.
ஆனால் இவை வழக்கமான ஸ்வீட்ஸ் அல்ல, இதில் உண்மையான தங்கம் உள்ளது என கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கிய ஸ்வீட் கடையின் உரிமையாளர், இந்த விலை உயர்ந்த ஸ்வீட் தங்கத்தை மெல்லிய இழைகளாக மாற்றி தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்வீட் ரூ.9,000 என்றும் தங்கம் பயன்படுத்தப்படாத ஸ்வீட் வகைகளுக்கு ரூ.600- ரூ.800 வரை விற்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். வெள்ளி பயன்படுத்தியும் ஸ்வீட் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதுமட்டுமின்றி, இந்த தங்க ஸ்வீட் உடல்நலத்திற்கு நல்லது எனவும், தொடக்கத்தில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்ததாக கூறிய அவர், தற்போது இதை வாங்குவதற்கு பல இடங்களில் இருந்து மக்கள் ஆர்வம் காட்டிவருவதாகவும் கூறியுள்ளார். இது மக்களின் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் நன்மை பயக்கும் என்று நம்புவதாக கூறும் அவர், தங்கத்தை உணவில் பயன்படுவதற்காக உண்ணத்தக்க வகையில் மாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் செயல்முறையின் காரணமாக இதன் விலை அதிகமாக உள்ளது என்றும் விளக்கியுள்ளார்.
தங்க ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் தங்கத்தை விட இந்த ஸ்வீட்டுகளில் பயன்படுத்தப்படும் தங்கத்தின் விலை அதிகம்" என்று அவர் கூறுகிறார். வரவிருக்கும் ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது சில வாடிக்கையாளர்கள் இந்த விலையுயர்ந்த ஸ்வீட்ஸை ஆர்டர் செய்துள்ளனர். இந்த ஸ்வீட்ஸ் விலை உயர்ந்தவை, ஆனால் வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு உள்ளது என்றும் கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.
இது சூரத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் உள்ள மக்களுக்கு கிடைக்கும் வகையில் டெலிவரி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். ஒரு கிலோவுக்கு ஒன்பதாயிரம் ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படும் கோல்டு ஸ்வீட்ஸ் என ஒரே இரவில் பரபரப்பாக இந்த செய்தி வைரலாகி வருகிறது.
Comments
Post a Comment