நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

டிக்கெட் கவுண்டரில் ஸ்பைடர்மேன்க்கு வந்த சோதனை - வைரல் வீடியோ!

 ஸ்பைடர்மேன் முகமூடி அணிந்த ஒரு நபரிடம் கேஷியர் கேட்கும் கேள்வி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  


மீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற மார்வெல் படமான "ஸ்பைடர்மேன்; நோ வே ஹோம்" ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.  இது ஸ்பைடர் மேன்; ஹோம்கமிங் (2017) மற்றும் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் (2019) ஆகியவற்றின் தொடர்ச்சியாகும், மேலும் இது மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின்(MCU) 27வது படமாகும்.

இப்படத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டயா, பெனடிக்ட் கம்பெர்பாட்ச், ஜேக்கப் படலோன்,ஜான் ஃபாவ்ரூ, ஜேமி ஃபாக்ஸ், வில்லெம் டஃபோ, ஆல்ஃபிரட் மோலினா, பெனடிக்ட் வோங், டோனி ரெவோலோரி ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்நிலையில் ஸ்பைடர்மேன் ரசிகர் ஒருவரின் கேளிக்கையான வீடியோ இணையத்தை வட்டமடித்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் பயனர் டிலான் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார், அதில் ஒரு நபர் ஸ்பைடர்மேன் உடை அணிந்து திரையரங்கில் உள்ள டிக்கெட் கவுண்டருக்கு செல்கிறார்.  அவரின் முகம் முதலில் கேமராவில் அது சரியாக பதியவில்லை.  அந்தக் கவுண்டரில் இருந்த கேஷியர் இந்த நபரை வரவேற்கிறார், பின்னர் பேசிய அவர் இரண்டு டிக்கெட்டுகளை தருமாறு கேட்கிறார்.  அதற்கு கேஷியர் எந்தப் படத்திற்கு? என்று கேட்கிறார்.

இந்த வீடியோ சாதாரணமாக தெரிந்தாலும் அனைவரிடம் கேளிக்கையாக ஒன்றாக மாறி வருகிறது.  ஸ்பைடர்மேன் முகமூடி அணிந்திருக்கும் அந்த நபரிடம் கேஷியர் கேட்ட கேள்வி அர்த்தமற்றதாகும் கருதப்படுகிறது.  இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே 129,000 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.  இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை என்றும், இது அதிக லைக்குகளை பெறும் என்றும், பலரும் ரசிப்பதற்கு தகுதியான வீடியோ என்றும் பலவாறும் நெட்டிசன்கள் இந்த வீடியோவிற்கு கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


ALSO READ : காற்றில் ஆடும் வீடு! ஆனால் 4 மாடி சொகுசு வீடு!! இது மாமர வீடு...

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!