நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகிலேயே அதிக நேரம் உழைப்பவர்கள் யார் தெரியுமா?- முழு புள்ளி விவரம்

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தை அடுத்த நிதியாண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் வேலை செய்யும் ஊழியர்களின் நேரம் தொடர்பாக பொருளாதார கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்ளது.

உலகத்திலேயே ஆசியா கண்டத்தில்தான் ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்கிறார்கள். இந்தியாவில் தான் அதிக அளவில் ஊழியர்கள் உழைக்கிறார்கள். வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் வேலை செய்கிறார்கள்.

கொலம்பியாவில் 47.6 மணி நேரமும், சீனாவில் 46 மணி நேரமும், துருக்கியில் 45.6 மணி நேரமும், மெக்சிகோவில் 44.7 மணி நேரமும், கோஸ்டாரிகாவில் 43.5 மணி நேரமும் வார வேலை நேரங்களாக இருக்கிறது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வேலை செய்யும் தினத்தை 4½ நாட்களாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதேபோல இந்தியாவிலும் அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலும் வேலை நாட்களை குறைக்க ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு வந்தது. தற்போது வேலை நாட்களை 4 தினமாக குறைக்க பரிசீலனை நடைபெற்று வருகிறது.

வேலை நாட்கள் குறைக்கப்பட்டாலும், தினசரி பணி நேரம் அதிகமாக இருக்கும். நாள்தோறும் பணியாற்றும் நேரம் 12 மணி நேரம் வரை நீட்டிக்கப்படும். இதனால் வாரத்திற்கு 48 மணி நேரம் என பணியாற்ற வேண்டிய அதே நிலையே ஏற்படும்.

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தை அடுத்த நிதியாண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மசோதா குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தற்போது தொழில் நிறுவனங்களில் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வீதம் வாரத்திற்கு 6 நாட்களுக்கு 48 மணி நேரம் பணி நேரமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்களாக உள்ளன.

ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்ற விதியை மாற்றம் செய்ய அரசு விரும்பவில்லை. எனினும் ஒரு நாளுக்கான வேலை நேரத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை வாங்கினால் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.

மீதமுள்ள 3 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இதை தொழிலாளர்கள் ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும். ஏனென்றால் அனைவராலும் 12 மணி நேரம் வேலை செய்ய இயலாது. இவற்றை உள்ளடக்கி தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்து, மசோதாவை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அடுத்த மாதத்தில் மசோதா தயாரிக்கப்பட்டு மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்படும். ஒப்புதலுக்கு பிறகு மசோதாவை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டான ஏப்ரல் 1-ந் தேதி முதல் இதை அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!