நாள் ஒன்றிற்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? அஜாக்கிரதை வேண்டாம் மக்களே....
- Get link
- X
- Other Apps
நம்முடைய உடலின் எடையில் கிட்டத்தட்ட 60 சதவிகிகிதம் தண்ணீர்தான் இருக்கிறது. உறுப்புக்களில் சிலவற்றில் 90 சதவிகிதம் வரை கூடத் தண்ணீர் இருக்கிறது.
எனவே, மூளை, இதயம், தசை, சருமம், நுரையீரல், ரத்த ஓட்டம் சரியாக இருக்கத் தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம் என்கின்றனர் பொது மருத்துவர்கள்.
தண்ணீரின் முக்கியத்துவம்
தண்ணீர்தான் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கவும், ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதும் கொண்டு செல்லவும், மூட்டுக்களுக்கு உராய்வு பொருளாகவும், அதிர்வைத் தாங்கும் பொருளாகவும் இருக்கிறது.
இதனால், ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், தண்ணீர் அருந்துவதைக் கணக்கிடும் நாம், நம்முடைய உணவிலும் தண்ணீர் இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறோம்.
காய்கறி, பழங்களில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. குறிப்பாக நீர்க்காய்கறிகள், தர்பூசணி உள்ளிட்ட பழங்களில் தண்ணீர்தான் பிரதானமாக இருக்கிறது. தினசரி காய்கறி, பழங்களைச் சாலடாகச் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் மேம்படும்.
இதுதவிர நாம் அருந்தும் காபி, டீ, ஜூஸ் உள்ளிட்டவற்றிலும் தண்ணீர் இருக்கிறது. இவை அனைத்தில் இருந்தும் ஒரு நாளைக்குத் தேவையான நீர்ச்சத்தில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் இதில் இருந்தே கிடைத்துவிடும்.
இதனுடன், இரண்டரை - மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது சிறுநீரகத்துக்குக் கூடுதல் வேலையைத் தரும்.
ALSO READ : காலை உணவாக இதை மட்டும் மறக்காமல் சாப்பிடுங்க! ஆரோக்கியம் நிச்சயம்....
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment