நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

புத்தாண்டுக்கு முந்தைய நாளில் வாட்ஸ் ஆப்பில் 140 கோடி அழைப்புகள்” - பேஸ்புக் நிறுவனம் தகவல்

 

புத்தாண்டுக்கு முந்தைய நாளில் மட்டும் உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் வழியாக 140 கோடி குரல் அழைப்புகள், வீடியோ அழைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

பேஸ்புக் நிறுவனத்தின் செயலியான வாட்ஸ் ஆப்பில் படங்கள், எழுத்து வடிவிலான உரையாடல்களை வாடிக்கையாளர்கள் பகிர்ந்துகொள்கின்றனர். அது மட்டுமல்லாமல் குரல் அழைப்பு, வீடியோ அழைப்பில் பேசும் வசதியும் உள்ளது.

புத்தாண்டுக்கு முந்தைய நாளில் மட்டும் 140 கோடி குரல் அழைப்புகள், வீடியோ அழைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இது ஒரேநாளில் செய்யப்பட்டுள்ள அழைப்புகள் எண்ணிக்கையில் மிக அதிகமாகும் என்றும், முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது வாட்ஸ் ஆப் அழைப்புகளின் எண்ணிக்கை 50 விழுக்காடு அதிகம் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!