நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மொய் நோட்டு எதற்கு.. கூகுள் பே இருக்கு..! வைரலாகும் புதுமண தம்பதியரின் புது ஐடியா.


மதுரையில் திருமண வீட்டில் மொய் பணத்தை வசூல் செய்ய கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் முறையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த புது ஐடியா சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருமணங்கள் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்பார்கள். அதிலும் உறவினர்கள் சூழ, பெற்றவர்கள் முன்னிலையில் நடைபெறும் திருமணங்கள் உண்மையில் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது தான். மேலும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மொய்பணம் வழங்குவது நமது கலாச்சாரத்தில் மறுக்க முடியாதது. இந்த நிலையில் மதுரையில் நடந்த ஒரு திருமண விழாவில் மொய்பணம் வழங்குவதில் சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த ஜெயந்தி - ஜெகதிஸ்வரன் ஆகியோரது மகள் சிவசங்கரிக்கும், மதுரை பாலரெங்கபுரம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் - சாந்தி ஆகியோரது மகன் சரவணன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர்களின் திருமணம் மதுரை கான்பாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.

தற்போது கொரானா பரவல் உள்ள நிலையில் அரசும் பல்வேறு விதிமுறைகளையும், கட்டுபாடுகளையும் அறிவுறுத்தியுள்ளது. மக்கள் அதிகமானோர் கூட்டமாக கூடுவதை தவிர்க்க அரசு அறிவுறுத்தி வரும் இந்த நிலையில், திருமணத்திற்கு வரமுடியாத முதியவர்கள், உடல் நலம் குன்றியவர்கள், வெளியூரில் வசிப்பவர்கள் ஆகியோர் திருமண தம்பதிகளுக்கு மொய் செலுத்துவதற்கு சிரமப்பட்டு வந்தனர். இதற்கு வசதியாக புதிய ஐடியாவை மதுரையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதாவது திருமண பத்திரிக்கையிலேயே ஆன்லைன் பணப்பரிமாற்ற செயலிகளான கூகுள் பே மற்றும் போன் பே ஆகியவற்றின் பார்க்கோடு விவரங்களை அச்சிட்டிருந்தனர். அதோடு திருமண மண்டபத்தில் மணமகள் பெயர் மற்றும் தொடர்பு எண் கொண்ட கூகுள் பே, போன் பே விவரங்களையும் பார் கோடுடன் வைத்திருந்தனர்.

இன்று ஆன்லைன் பரிமாற்றங்கள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது இந்த நிலையில் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் உறவினர்கள் தங்கள் மொய்பணத்தை செலுத்த வசதியாக கல்யாண வீட்டார் இந்த ஏற்பாடு மதுரை மக்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.


 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!