நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நிமிடத்துக்கு 4,100 ஆர்டர்கள் குவிந்தன: சொமேட்டோ சி.இ.ஓ. ஆச்சரியம்

 

ஒரு லட்சம் ஆர்டர்கள் ஆங்காங்கே விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னால் இப்படிக் கண்டதில்லை” என்று திபீந்தர் கோயல் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


கோவிட் 19 காலக்கட்டத்தில் இருப்பதால் 2021 புத்தாண்டு பிறப்பதையொட்டி வழக்கமாக திருவிழாக்கோலம் பூணும் நகரங்கள் அமைதியாக இருந்தன. மக்கள் வீட்டிலேயே புத்தாண்டைக் கொண்டாடினார்கள். இதனையடுத்து உணவு விநியோக செயலிகள் சுறுசுறுப்படைய சொமேட்டோவுக்கு நிமிடத்துக்கு 4,100 ஆர்டர்கள் குவிய சப்ளை செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

வியாழன் மாலை மட்டுமே நிமிடத்துக்கு 3,200 ஆர்டர்கள் குவிந்துள்ளது.

இது தொடர்பாக சொமேட்டோ சி.இ.ஓ. தீபிந்தர் கோயல் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “எங்கள் வாழ்நாளில் இதுதான் எங்களுக்கு குவிந்த அதிகபட்ச ஆர்டர்களாகும். (தோராயமாக நிமிடத்துக்கு 2,500 ஆர்டர்கள்)” என்று பதிவிட்டுள்ளார்.
மாலை 6 மணிக்கு நிமிடத்துக்கு 2,500 ஆர்டர்களாக வந்து கொண்டிருந்தது முக்கால் மணி நேரம் கழித்து நிமிடத்துக்கு 3,200 ஆர்டர்களாக அதிகரித்துள்ளது.

இந்தியர்கள் உணவு விநியோக செயலிகள் மூலம் அதிக அளவில் பீட்சா மற்றும் பிரியாணியை ஆர்டர் செய்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

“பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்ததால் மக்கள் வீட்டிலேயே இருந்தனர். இதனால் எங்களுக்கு ஆர்டர்கள் குவிந்தன. வாடிக்கையாளர்கள் முன்னமேயே ஆர்டர் செய்வது நல்லது, கடைசி நிமிடத்தில் ஆர்டர் செய்தால் காத்திருக்க நேரிடும்.இப்போதைக்கு ஒரு லட்சம் ஆர்டர்கள் ஆங்காங்கே விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னால் இப்படிக் கண்டதில்லை” என்று திபீந்தர் கோயல் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!