நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மனிதகுலத்துக்கு அழிவு? 'நாஸ்ட்ராடமஸ்' கணிப்பு

 இந்தாண்டு, மனிதகுல அழிவுக்கான துவக்கமாக இருக்கும்; பெரிய அளவில் பஞ்சம், மிகப் பெரிய விண்கலம் பூமியை தாக்குவது போன்ற சம்பவங்கள் நடக்கும்' என, பிரான்ஸ் ஜோதிடர் நாஸ்ட்ராடமஸ், 465 ஆண்டுகளுக்கு முன் கணித்துள்ளார்.


ஐரோப்பிய நாடான பிரான்சைச் சேர்ந்த, மைக்கேல் நாஸ்ட்ரடாமஸ், 15ம் நுாற்றாண்டில் வாழ்ந்த ஜோதிடர். அவர், 3797ம் ஆண்டு வரைக்கும் தன் கணிப்புகளை, நான்கு வரி பாடல்கள் மூலம் எழுதியுள்ளார். 'ஜாம்பி'இந்த பாடல்களில், மனிதகுலத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை குறிப்பிட்டுள்ளார். கடந்த, 1955ல் வெளியிடப்பட்ட, அவரது பாடல்கள் அடங்கிய நுால், பல ஆச்சரியங்கள் உள்ளடக்கியுள்ளது.

ALSO READ:   உலகையே பீதியில் ஆழ்த்திய மர்ம உலோகத்தூண்..! இந்தியாவில் குஜராத்தில் தோன்றியது... பின்னணியில் யார்? நீடிக்கும் மர்மம்

அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எப் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டது, அமெரிக்காவில், செப்., 11 தாக்குதல், ஹிட்லரின் வளர்ச்சி உட்பட, அவர் எழுதிய பல குறிப்புகள் நடந்துள்ளது, வியக்கக் கூடியதாக அமைந்துள்ளன.நடப்பு, 2021ம் ஆண்டு குறித்து அவர், 465 ஆண்டுகளுக்குமுன் கணித்து எழுதியுள்ளது, அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.


சக மனிதர்களை வேட்டையாடும் பேய்களைப் போல மனிதர்கள் மாறுவதாகக் கூறப்படும், ஒரு கற்பனை கதாபாத்திரமான, 'ஜாம்பி'யாக மக்கள் மாறுவர் என்றும், ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கும் உயிரி ஆயுதங்கள், மனிதக் குல அழிவுக்கான துவக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அவர் கணித்துள்ளார்.மனித குல அழிவுக்கான துவக்கமாக, பெருந்தொற்றுகள் பரவும், கடும் பஞ்சம் ஏற்படும், மிகப் பெரிய பூகம்பங்கள் ஏற்படும் என்றும், கணிப்பில் கூறப்பட்டுள்ளது.


அச்சம்

அளவில் பெரியதாகவும், மிகுந்த ஒளியுடன் கூடிய, வால் நட்சத்திரம் போன்ற விண்கல், பூமியை தாக்கக் கூடும், அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் கடும் பூகம்பம் ஏற்படும் என, பல அச்சத்தை ஏற்படுத்தும் கணிப்புகள், அதில் இடம்பெற்றுள்ளன.அவரது கணிப்புகளை இதுவரை ஆய்வு செய்துள்ள வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட நிபுணர்கள், 'இந்த கணிப்புகள் பெரும்பாலானவை தெளிவற்றதாக உள்ளன' என, குறிப்பிட்டுள்ளனர்.



ALSO READ;     நெருக்கடி காலங்களில் உதவும் வகையில் வெளிநாட்டவர்களுக்கான புதிய ‘செயலி’ அறிமுகம்

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!