நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கருப்புச் சந்தைகளின் ரகசியங்களை விளக்கும் தொலைக்காட்சித் தொடர்: உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று படமாக்கிய பெண் செய்தியாளர்.

உலகின் அடர் இருட்டில் இயங்கும் தலைமறைவு கருப்புச் சந்தைகள் குறித்த ரகசியங்களை விளக்கும் புதிய தொலைக்காட்சித் தொடரை பத்திரிகையாளரான மாரியானா வான் ஜெல்லர் இயக்கியுள்ளார்.

மெக்சிகன் கார்டல் பைப்லைன் , தென்கிழக்கு ஆசியாவில் புலியின் எலும்புகள் கண்டெடுப்பு கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் பெருவின் அச்சகங்கள், தென் அமெரிக்காவில் இருந்து புளோரிடாவுக்கு கோகெய்ன் கடத்திவரும் கும்பல்கள், போலி முதலீட்டு நிறுவனங்கள் என பல பயங்கரமான செயல்பாடுகளை இத்தொடர் அம்பலப்படுத்துகிறது.

இதனைப் படம் பிடிக்க தமது குழுவினருடன் பத்து மாதங்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளுக்கு மாரியானா பயணம் செய்தார். கோவிட் காரணமாக உலகின் கருப்புச் சந்தைகளின் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறுகிறார் மாரியானா.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்