குக்கரில் உதிரியாக பூப்போல சாதம்: உலை வடி சோறு பக்குவத்தில் சமைக்கும் ரகசியம்
- Get link
- X
- Other Apps
How To Make White Rice In Cooker: குக்கரில் உதிரியாக சோறு சமைக்கும் ரகசியம் இதுதான். செய்து மகிழுங்கள் மக்களே!
Rice Cooking Tamil Video, How To Make White Rice In Cooker: அவசர யுகம்… வேலை எளிது என்கிற காரணத்திற்கான பலரும் குக்கர் சமையலுக்கு மாறிவிட்டோம். ஆனால் பாத்திரத்தில் உலை வைத்து வடித்த சாதம் போல, குக்கர் சாதத்தின் பக்குவம் இருக்கிறதா? என்றால், இல்லை. ஆனால் உரிய முறையில் செய்தால், குக்கரிலும் உலை வடி சாதம் போல உதிரியாக சாதம் சமைக்க முடியும். எப்படி? என இங்கு பார்க்கலாம்.
பாத்திரத்தில் வடிக்கும் சாதத்திற்கு உலை வைக்கும்போதே புழுங்கல் அரிசியை ஊற வைப்போம். அது நன்கு ஊறி உப்பி உதிரி உதிரியாக வரும். குக்கரிலும் நாம் கடைபிடிக்க வேண்டியது அதே ரகசியத்தைத்தான்!
How To Make White Rice In Cooker: குக்கரில் சாதம் சமையல்
முதலில் அரிசியை நன்கு ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீர் ஊற்றி அலசிக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரை அகற்றியதும் தண்ணீர் இல்லாமலேயே கைகளால் பிசைந்து கழுவுங்கள். பின் மீண்டும் தண்ணீர் பிடித்து அலசுங்கள். அந்த தண்ணீரை வடித்துவிட்டு மீண்டும் தண்ணீர் பிடித்து அலசுங்கள். இப்படி 3 முறை தண்ணீரில் அலச வேண்டும்.
அதன்பிறகு 1 டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் அளவு தண்ணீர் வைக்க வேண்டும். புதிய அரிசியாக இருப்பின் 2 1/2 டம்ளர் தண்ணீர் வைத்தால் போதுமானது. எந்த டம்ளரில் அரிசியை அளந்தீர்களோ அதே டம்ளரில்தான் தண்ணீர் வைக்க வேண்டும். குக்கரில் தண்ணீர் ஊற்றியதும் அதில் சமையல் எண்ணெய் 1 ஸ்பூன் விடுங்கள். பின் ரப்பர், பிரஷர் குக்கர் மூடி போட்டு மூடிவிட வேண்டும்.
உதிரியாக குக்கரில் சோறு
விசில் போடாமல் மிதமான தீயில் குக்கரை அடுப்பில் வையுங்கள். குக்கரில் தண்ணீர் பிரஷர் அடிக்கும்போது விசில் போட்டு மூடுங்கள். விசில் 3 முறை சத்தம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். பின் உடனே குக்கர் மூடியை திறக்காமல் அடுப்பிலேயே விட்டுவிடுங்கள்.
பிரஷர் தானாக இறங்கிய பிறகு குக்கர் மூடியை திறக்க வேண்டும். தற்போது கரண்டியால் சாதத்தை கிளறிப்பாருங்கள். பூப்போல சாதம் வெந்திருக்கும். குக்கரில் உதிரியாக சோறு சமைக்கும் ரகசியம் இதுதான். செய்து மகிழுங்கள் மக்களே!
ALSO READ: சளி.. இருமல்.. பறந்தே போகும்! இப்படி ஒரு மிளகு ரசம் வச்சி சாப்பிடுங்க
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment