நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

செவ்வாயின் தரை வெப்பநிலை குறித்து ஆய்வு செய்வதற்கான இன்சைட் லேண்டருடன் அனுப்பப்பட்ட, குழி தோண்டும் கருவி செயலிழந்துவிட்டதாக அறிவிப்பு.

செவ்வாயின் தரை வெப்பநிலை குறித்து ஆய்வு செய்வதற்காக நாசாவின் இன்சைட் லேண்டருடன் அனுப்பப்பட்ட, குழி தோண்டும் கருவி, அதன் முயற்சியில் தோல்வியடைந்து செயலிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பரில், செவ்வாயில் தரையிறங்கிய இன்சைட் லேண்டருடன், ஜெர்மன் விண்வெளி ஆய்வு அமைப்பின், 40 சென்டிமீட்டர் நீளமுள்ள கூர்முனைக் கருவியும் இடம்பெற்றது.

தரையை அகழ்ந்து ஆய்வு செய்வதால், அகழ் எலி எனப்பெயரிடப்பட்டிருந்த இக்கருவி, 16 அடி ஆழம் வரை தோண்டி, வெப்ப சென்சார்கள் மூலம் தரை வெப்பநிலையை அளவிட உதவும் என்பதுதான் திட்டம்.

ஆனால் அரை மீட்டருக்கு மேல் துளைபோட முடியாமல் அக்கருவி செயலிழந்துவிட்டதாக நாசா அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்