நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

2021-ம் ஆண்டின் முதல் கங்கண சூரிய கிரகணம் கனடா, ரஷ்யா நாடுகளில் முழுமையாக தெரிந்தது

2021-ம் ஆண்டின் முதல் கங்கண சூரிய கிரகணம் கனடா, ரஷ்யா, கிரீன்லாந்து உள்ளிட்ட நாடுகளில் முழுமையாக தெரிந்தது.
சூரியனுக்கும், புவிக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் நிலவு வரும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதில் சூரியனை நிலவால் முழுமையாக மறைக்க முடியாமல், ஒரு வளையம் போல சூரியனின் வெளி விளிம்பு அதிகபட்ச கிரகணத்தின்போது வெளித்தெரிவதையே கங்கண சூரிய கிரகணம் என்கிறோம். அந்தவகையில் வானியல் அபூர்வ நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் ஏற்பட்டது.

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம், கடந்த மே 26-ம் தேதி நிகழ்ந்தது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. வழக்கமாக சந்திர கிரகணம் நிகழ்ந்து 15 நாட்களில் சூரிய கிரகணம் நிகழும். அதன்படி, ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழும் என நாசா அறிவித்தது.

இந்தநிலையில், ஆண்டில் முதல் கங்கண சூரிய கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகலில் தொடங்கியது. கங்கண சூரிய கிரகணம், கனடா, ரஷ்யா, கிரீன்லாந்து ஆகிய நாடுகளில் முழுமையாக தெரிந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பகுதியளவு தெரிந்தது. கரீபியனின் சில பகுதிகள், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பகுதியாக தெரிந்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் மட்டும் சிறிது நேரம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடிந்தது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்