நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

60 வயது பாட்டியுடன் டேட்டிங் செய்யும் 23 வயது வாலிபர்....

அமெரிக்காவில் 23 வயது இளைஞர் ஒருவர் 60 வயது பாட்டியை டேட்டிங் செய்யும் விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைராலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்த முழு தகவலை கீழே காணுங்கள்.
ஒரு காலத்தில் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு இடையே சுமார் 5 ஆண்டுகளாவது இடைவெளி இருக்கும். சில நேரங்களில் 10-15 ஆண்டுகள் இடைவெளியுடன் தம்பதிகளுக்கு திருமணம் நடப்பது அந்த காலங்களில் சாதாரண விஷயம் ஆனால் அந்த தம்பதிகளில் எல்லாம் ஆண்களுக்கு வயது அதிகமாக இருக்கும். பெண்ணிற்கு வயது குறைவாக இருக்கும். தன்னை விட அதிக வயதுடைய பெண்ணை ஒரு ஆண் திருமணம் செய்வது என்பது அரிதான விஷயம் தான். மிக சில உதாரணங்களே இவ்வாறு தன்னை விட குறைவான வயதுடைய ஆண்களை திருமணம் செய்த பெண்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 23 வயதான குரான் என்ற இளைஞர் தன்னை விட 37 வயது அதிகமான அதாவது 60 வயதான பாட்டியை டேட்டிங் செய்து வருகிறார். ஆம் நீங்கள் வாசித்தது சரி தான் 60 வயதான பாட்டியைதான் 23 வயது இளைஞர் டேட்டிங் செய்து வருகிறார். அந்த 60 வயது பாட்டியின் பெயர் செரில்

இது குறித்து டிக்டாக்கில் ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அது யூடியூபிலும் வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் மக்களின் கேள்விக்கு பதிலளிக்கின்றனர். அதில் ஒருவர் இந்த டேட்டிங்கிற்கு உங்கள் குடும்பத்தினர் சம்மதித்து விட்டனரா என கேட்டார் அதற்கு அந்த 60 வயது பாட்டி செரில் கூறியபோது தனக்கு குரானை விட அதிக வயதான பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் இணைந்திருப்பது சந்தோஷம் தான். எங்களை போல வாழ அவர்கள் தற்போது முயன்று வருகிறார்கள் என கூறினார்.

பலர் இவர்களை கிண்டல் செய்து பதிவுகளை போட்டனர் அதற்கு இவர்கள் எந்த பதிலளையும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் செரில் தோற்றம் வயதான சுறுங்கிய தோலை பலர் கிண்டல் செய்தனர். ஆனால் அவர்கள் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவர்களது பாசிடிவாக மட்டுமே வெளிப்படுத்தி வருகின்றனர்.
தன்னைவிட 37 வயது அதிகமான பெண்ணை ஒரு இளைஞர் திருமணம் செய்திருப்பது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. 



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்